விஜய் தேவர்கொண்டா பெயரால் ஏமாந்துள்ள ஆண்ட்ரியா - ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன ஷாக்கிங் தகவல்.

By Rajkumar · 20/9/2020

தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர் ஒரு சிலர் மட்டுமே அந்த லிஸ்டில் தற்போது கலக்கிக் கொண்டு இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் அதன் பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்த ஆண்ட்ரியா ஒரு சில படங்களில் வில்லியாக நடித்து தனது நடிப்பை நிரூபித்து இருந்தார்.

மேலும், நடிகை ஆண்ட்ரியாவிற்க்கு சர்ச்சை ஒன்றும் புதிதான விஷயம் கிடையாது. இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.ஆரம்பத்தில் பல்வேறு படங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா அதன் பின்னர் குறிப்பிட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் அதிலும் வட சென்னை போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

இப்படி ஒரு நிலையில் ஆண்ட்ரியா, விஜய் தேவர்கொண்டா பெயரில் ஏமாந்து உள்ளதாக ராஜேஷ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் பேசியுள்ள அவர், ஆண்ட்ரியாவை ஒரு சிலர் விஜய் தேவர்கொண்டா நடிக்கும் வெப் சீரிஸில் நடிக்க அணுகினார்கள். ஆனால், அவர்கள் சொன்ன காரணம் முன்னுக்பின்னாக இருக்கிறது அதனால் எனக்கு குழப்பமாக இருக்கிறது என்று ஆண்ட்ரியா என்னிடம் சொன்னார். பின்னர் தான் தெரிந்தது அது ஏமாற்று கும்பல் என்று.

வீடியோவில் 21 நிமிடத்தில் பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=80Q5aeJvRO4&feature=youtu.be

அவ்வளவு ஏன் எனக்கே அது போல நடந்துளளது. என்னிடம் அசிஸ்டன்ட்டாக வேலை செய்த ஒருவர் எனக்கு தெரியாமல் பணத்தை வாங்கிக்கொண்டு ரசிகர்களுக்கு என்னை பற்றி அப்டேட் செய்வது என்னுடைய வீட்டின் லாக்கர் நம்பரை எல்லாம் கொடுப்பது என்று செய்து இருக்கிறார்.என்னுடன் அவர் ஒன்றரை வருடங்கள் அவர் வேலை செய்து இருக்கிறார். சரி, பரவாயி ல்லை தப்பு பண்ணியாச்சு அவர் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்று கூறியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full