இன்னும் நெறய போடுங்க - முதல் முறையாக பிகினி புகைப்படத்தை பகிர்ந்த ஆண்ட்ரியாவிற்கு ரசிகர்கள் ரெக்குவஸ்ட்.

By Rajkumar · 19/8/2021

தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர் ஒரு சிலர் மட்டுமே அந்த லிஸ்டில் தற்போது கலக்கிக் கொண்டு இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் அதன் பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்த ஆண்ட்ரியா ஒரு சில படங்களில் வில்லியாக நடித்து தனது நடிப்பை நிரூபித்து இருந்தார்.

மேலும், நடிகை ஆண்ட்ரியாவிற்க்கு சர்ச்சை ஒன்றும் புதிதான விஷயம் கிடையாது. இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.ஆரம்பத்தில் பல்வேறு படங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா அதன் பின்னர் குறிப்பிட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் அதிலும் வட சென்னை போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

மேலும், வடசென்னை படத்தில் இவர் அமீருடன் நடித்த சேமி நியூட் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது வடசென்னை படத்திற்கு பின்னர் தமக்கு தொடர்ந்து அதே போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அதனை நிராகரித்து விட்டதாகவும் சமீபத்தில் கூறியிருந்தார் ஆண்ட்ரியா. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் மாலத்தீவுக்கு இன்பச் சுற்றுலா சென்று இருந்தார். அங்கே சென்றதில் இருந்தே தொடர்ந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் முதல் முறையாக அக்மார்க் நீச்சல் உடையில் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அதிலும், கடற்கரையில் அமர்ந்து மதுபானத்தை அருந்து கொண்டு படு ஜாலியாக இருந்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full