#Mood என்று பதிவிட்டு கூவே கத்திரிக்காய் Emoji-யை போட்ட ஆண்ட்ரியா. கண்ட மேனிக்கு கமன்ட் செய்ததால் கேப்ஷனையே நீக்கிட்டாரு.

By Rajkumar · 18/2/2021

தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர் ஒரு சிலர் மட்டுமே அந்த லிஸ்டில் தற்போது கலக்கிக் கொண்டு இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் அதன் பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்த ஆண்ட்ரியா ஒரு சில படங்களில் வில்லியாக நடித்து தனது நடிப்பை நிரூபித்து இருந்தார்.

மேலும், நடிகை ஆண்ட்ரியாவிற்க்கு சர்ச்சை ஒன்றும் புதிதான விஷயம் கிடையாது. இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.ஆரம்பத்தில் பல்வேறு படங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா அதன் பின்னர் குறிப்பிட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் அதிலும் வட சென்னை போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

மேலும், வடசென்னை படத்தில் இவர் அமீருடன் நடித்த சேமி நியூட் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது வடசென்னை படத்திற்கு பின்னர் தமக்கு தொடர்ந்து அதே போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அதனை நிராகரித்து விட்டதாகவும் சமீபத்தில் கூறியிருந்தார் ஆண்ட்ரியா. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதற்கு பதிவிட்டு இருந்த கேப்ஷன் பெரும் கேலிக்கு உள்ளாகியதால் அதனை டெலீட் செய்துள்ளார். சமீபத்தில் நடிகை ஆண்ட்ரியா, புகைப்படம் ஒன்றை பதிவிட்டு #MOOD என்று ஹேஷ் டேக்கை போட்டு கத்திரிக்காய் எமோஜி ஒன்றை பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை கண்ட பலரும் இரட்டை அர்த்தத்தில் கேரட், பீட்ரூட் என்று பதிவிட அந்த பதிவை நீக்கி பின்னர் வேறு ஒரு கேப்ஷனை போட்டுள்ளார் ஆண்ட்ரியா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full