சும்மா டிரேஸ்ஸ போட்டு வந்து அத ஆட்டிக்காட்ட எனக்கு விருப்பைமில்லை. விஜய், அஜித் கூட நடிச்சதால தான் நயன்தாரா. ஆண்ட்ரியாவின் வைரல் வீடியோ.

By Rajkumar · 24/12/2020

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. நடிகை மட்டுமல்லாமல் இவர் சிறந்த பாடகியும் ஆவர். ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்த ஆண்ட்ரியா 'வடசென்னை' 'தரமணி' போன்ற படங்களில் தனது வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார். அதிலும் வட சென்னை படத்தில் ஆடையில்லாமல் இவர் நடித்த காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படி ஒரு தரமணி படத்திற்கு பின்னர் ஆண்ட்ரியா மேடையில் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் பேசியுள்ள ஆண்ட்ரியா, தரமணி திரைப்படத்திற்கு பின்னர் நான் இதுவரை ஒரு படத்தில் கூட ஒப்பந்தம் ஆகவில்லை. ஆனால், விஜய்க்கு ஜோடியாக நடித்த ஒரு நடிகை அவருடன் ஒரு மூன்று பாடலில் டான்ஸ் ஆடியதை தவிர எதுவும் செய்யவில்லை. ஆனால், அவர் அடுத்தடுத்து 3, 4 படங்களில் நடித்து விடுவார். அவனால் எனக்கு அப்படி பட வாய்ப்புகள் அமையவில்லை.

அனைவருக்குமே தரமணி படம் பிடித்து இருந்தது. மேலும், என்னுடைய நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். ஆனால் எனக்கு அதன் பின்னர் எந்த பட வாய்ப்பும் வரவில்லை காரணம். ஒரு பெண் வலுவான கதாபாத்திரத்தில் நடித்து விட்ட பிறகு அவள் எந்த கேள்வி கேட்டாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நான் மிகவும் கவர்ச்சியாகநடிக்கலாம் , என்னால் அப்படி நடிக்க முடியும். ஆனால், அரைகுறை ஆடை அணிந்து கொண்டு வந்து சும்மா என்னுடைய உடலை ஆட்டி காட்டிவிட்டு செல்வது எனக்கு மகிழ்ச்சி கிடையாது.

https://www.youtube.com/watch?v=nPERxEo2Q5E&feature=youtu.be

நான் நிர்வாணமாக இருக்கும் ஒரு காட்சியை திரையில் என்னால் செய்ய முடியும், நான் முத்தக் காட்சிகளைச் செய்ய மாட்டேன் என்று சொல்லும் பெண்களை விட இது மிகவும் பொருத்தமாக இருக்கும், ஆனால் இறுதியில் அவர்கள் தான் நிலைக்கிறார்கள். நடிகைகள் பலரும் தங்களை நிரூபிக்க ஒரு சக நடிகர் தேவையா ? தீபிகா படுகோன் தன்னை தீபிகா படுகோன் என்று நிரூபிக்க அவர் ஷாருக்கானுடன் ஒரு படம் நடிக்க வேண்டி இருக்கிறது அதே போல நயன்தாரா தன்னை நயன்தாரா என்று நிரூபிக்க விஜய் அஜித் சூர்யா ரஜினி என்று பலர் உடன் நடிக்க வேண்டியதாக இருக்கிறது ஆனால் ஏன் நான் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடித்து என்னை ஆண்ட்ரியாவை நிரூபிக்க முடியாது என்று கூறிய அவர் தமிழ் சினிமா ஆண் ஆதிக்கம் கொண்ட ஒரு தொழிலாக இருந்து வருகிறது என்றும் கூறியிருந்தார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full