காதலை ஏற்காததால் இளைஞர் தற்கொலை. லைவில் அனிகா சொன்ன ஷாக்கிங் தகவல்.

By Rajkumar · 23/5/2021

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

நடிகை அனிகா அவர்கள் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த கத திருடனும் என மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானர். தல அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளி வந்த "என்னை அறிந்தால்" படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்தர். இவர் மலையாள மொழியில் பத்துக்கும் மேற்பட்ட படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். அதுவும் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.

இதையும் பாருங்க : ப்பா, குக்கு வித் கோமாளி கனியா இது. திருமணத்தின் போது எப்படி இருந்திருக்கார் பாருங்க.

என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து அனிகா விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்திருந்தார். பொங்கல் பாடாண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்திருந்தது. மேலும், வசூல் ரீதியாகவும் இந்த படம் பல்வேறு சாதனைகளை செய்திருந்தது. இந்த படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த அனிகா தற்போது நயன் போலவே மாறி வருகிறார்.

https://twitter.com/Mysteri13472103/status/1396093227254435844

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது ரசிகர்கள் கேட்கும் கேளிவிகளுக்கு பதில் அளிப்பார். அப்படி சமீபத்தில் இவர் லைவ் சாட்டில் ஈடுபட்ட போது ரசிகர் ஒருவர், உங்களுடைய தீவிர ரசிகர் உங்களை காதலிப்பதாக கூறி பின்னர் நீங்கள் காதலை ஏற்கவில்லை தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்று என்ன செய்வீர்கள் என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த அனிகா, விசித்திரமான விஷயம் என்னவென்றால், அந்த சோகமான நிலைமை உண்மையில் எனக்கு ஏற்பட்டது. இப்படி சொல்லி எனக்கு ஒரு மெயில் வந்தது. அது மிகவும் பயமாக இருந்தது. ஆனால், அதை பற்றி விட்டுடுங்கள் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full