'அந்த படம் பத்தி பேசுனீங்கன்னா' கேம் சேஞ்சர் படம் பற்றி கேட்டதும் மழுப்பிய அஞ்சலி
'கேம் சேஞ்சர்' படம் பற்றிய கேள்விக்கு நடிகை அஞ்சலி மழுப்பி இருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் படம் தான் ‘கேம் சேஞ்சர்’. இந்தப் படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்திருக்கிறார். ராம்சரணுடன் இணைந்து கியாரா அத்வானி, எஸ் .ஜே .சூர்யா, சமுத்திரக்கனி, சுனில், அஞ்சலி உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
கடந்த ஜனவரி 10 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு உலக அளவில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சுமார் ரூபாய் 400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் துரதிர்ஷ்டவசமாக பாக்ஸ் ஆபிஸில் வெறும் ரூபாய் 150 கோடியை மட்டுமே ஈட்டியது. இந்தப் படம் திரையரங்குகளில் ஓடுவது தற்போது கிட்டத்தட்ட முடிவடைந்து, இதன் OTT வெளியீட்டை அமேசான் பிரைம் வீடியோ விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கேம் சேஞ்சர் தோல்வி:
மேலும், இந்த படத்தின் தோல்விக்கு காரணம் ராம் சரணின் எதிர்பாளர்கள் இந்த திரைப்படத்திற்கு எதிராக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டது தான் எனக் கூறப்படுகிறது. அதுதான் படத்தின் விமர்சனங்களை மோசமாக்கியது. மேலும் சிக்கலாக்கும் வகையில், கேம் சேஞ்சர் படத்தோடு வெளியான 'டாக்கு மகராஜ்' மற்றும் 'சங்கராந்திகி வஸ்துனம்' ஆகிய படங்கள் கேம் சேஞ்சரை ஓரங்கட்டி பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தியது. அதோட ஷங்கரின் காலாவதியான கதை விவரிப்பு பார்வையாளர்களிடம் எதிரொலிக்கத் தவறிவிட்டது என்றும் கூறப்படுகிறது.
గేమ్ చేంజర్ మంచి సినిమా... కానీ ఆడలేదు. ఫ్లాప్ కి కారణాలు చెప్పాలంటే ఈ వేదిక సరిపోదు
— Telugu360 (@Telugu360) January 27, 2025
-- అంజలి pic.twitter.com/hNkoIw9tM2
மழுப்பிய அஞ்சலி:
இந்நிலையில், 'மதகஜராஜா' படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்ட நடிகை அஞ்சலியிடம், இந்த பொங்கல் உங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல், தமிழில் மதகஜராஜா படம் வெற்றி பெற்றது போல், தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' வெற்றி பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அஞ்சலி, ஒரு நடிகையாக நான் என்னுடைய பொறுப்புகளை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் இல்லையா. நம்மை நம்பி ஒரு கேரக்டர் டிசைன் செய்யும் போது, அதை 100 சதவீதம் நாம் கொடுப்பதோடு நமது வேலை முடிவடைகிறது. அந்தப் படத்தை ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.
தோல்வி குறித்து:
அதற்காக ப்ரோமோஷன்களுக்கு செல்கிறோம், படம் குறித்து ஆடியன்ஸிடம் சொல்கிறோம். அதை தாண்டி 'கேம் சேஞ்சர்' குறித்து பேச வேண்டும் என்றால் அதற்கு தனியாக ஒரு இன்டர்வியூ வைக்க வேண்டும். அது எதற்கு என்று அனைவருக்குமேதெரியும். சில படங்களில் நம்பி நாம் நடிக்கிறோம். அதே மாதிரி தான் நான் 'கேம் சேஞ்சர்' படத்தில் 200 சதவீதம் என் உழைப்பை கொடுத்தேன். இதில் சந்தோஷம் என்ன என்றால் ஆடியன்ஸ் என்னிடம் சொன்னவரை படம் நல்லா இல்லை என்று கூறவில்லை. நல்ல சினிமா என்றுதான் கூறுகிறார்கள். நல்ல சினிமா என்றால் அது நல்லா வரவேற்பு தான். அதே மாதிரி கேம் சேஞ்சர் நல்ல சினிமா, நீங்க நல்லா ஆக்ட் பண்ணி இருக்கீங்க என்று சொல்கிறார்கள்.
மத கஜ ராஜா:
அதுவே எனக்கு போதுமானது என்று கூறியிருக்கிறார். தற்போது அஞ்சலியின் இந்த வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும், அஞ்சலி நடிப்பில் இந்தப் பொங்கலுக்கு ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றப் படம் 'மத கஜ ராஜா'. சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பே வெளியாக வேண்டிய இப்படம் சில காரணங்களால் கடந்த பொங்கலுக்கு ரிலீசாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் சுந்தர் சி இயக்கிய இந்தப் படத்தில் அஞ்சலியுடன் நடிகர் விஷால், நடிகை வரலட்சுமி, சந்தானம், மறைந்த நடிகர்கள் மனோ பாலா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.