பல ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் நடிகை அஞ்சலியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அஞ்சலி. இவர் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பே விளம்பர படங்களில் தான் நடித்துக் கொண்டிருந்தார். விளம்பர படத்திற்கு பிறகு தான் இவருக்கு சினிமா பட வாய்ப்பு கிடைத்தது.

இவர் 2007 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளி வந்த கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் இவர் மிக சிறப்பாக நடித்திருந்தார். மேலும், நடிகை அஞ்சலி முதல் படத்திலேயே மக்கள் மனதில் பிரபலமானார் என்று சொல்லலாம். அதற்கு பிறகு 2010 ஆம் ஆண்டு அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் இவருடைய சினிமா உலகிற்கு தூக்கி விட்டது.

Advertisement

அஞ்சலி திரைப்பயணம்:

அதற்கு பிறகு தொடர்ந்து இவர் எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா, ரெட்டைசுழி, சேட்டை, வத்திக்குச்சி, இறைவி, மாப்பிள்ளை சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து இருக்கிறார். இதனிடையே நடிகை அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் இடையே காதல் இருக்கிறது என்று பல கிசுகிசுக்கள் சமூக வலைதளங்களில் பரவி இருந்தது.

அஞ்சலி உடல் எடை குறைப்பு:

அதெல்லாம் பொய் என்று அஞ்சலி சொல்லி இருந்தார். பின் சினிமாவில் நுழைந்த சில ஆண்டுகளில் உடல் எடை கூட சற்று பருமனானார் அஞ்சலி. இதனால் இவருக்கு பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது கடும் உடற்பயிற்சிகளை செய்து ரொம்பவும் பிட்டாகா மாறி விட்டார் அஞ்சலி. நடிகை என்றாலே அவர்களுக்கு உடல் அழகு உள்ளவரை தான் அவர்களுக்கு மார்க்கெட் எல்லாம். இதனால் உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொண்டு பழைய நிலைமைக்கு மாறி விட்டார் அஞ்சலி.

Advertisement

அஞ்சலி நடிக்கும் படம்:

மேலும், அவரின் லேட்டஸ்ட் புகைப்டம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மீண்டும் படங்களில் இவர் நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான படத்தில் அஞ்சலி குத்தாட்டம் போட்டிருந்த வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பிரபலங்கள் முதல் ரசிகர் வரை என பலரும் அந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்கள். இப்படி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக அஞ்சலி சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement

அஞ்சலியின் சொத்து மதிப்பு:

தற்போது தெலுங்கு படம் ஒன்றில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை அஞ்சலியின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. அதாவது, 15 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் அஞ்சலியின் சொத்து மதிப்பு வெறும் 10 கோடி கோடி என தகவல் வெளியாகிறது. இதை பார்த்த ரசிகர்கள் 50 லட்சம் முதல் 80 லட்சம் வரை ஒரு படத்திற்கு சம்பளம் வாங்கிய அஞ்சலியின் சொத்து மதிப்பு 10 கோடி தானா? என்று அதிர்ந்து போய் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement