தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் அனுஹாசன். இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார். இவர் தொகுத்து வழங்கிய பல நிகழ்ச்சிகள் மக்கள் மதியம் பிரபலமாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரும், நடிகையும் ஆன சுகாசினியின் தங்கை தான் அனுஹாசன் என்பது குறிபிடத்தக்கது. அனுஹாசன் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திரா என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அனுஹாசன் தான் நடித்த முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். அதற்கு பிறகு இவர் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இவர் தமிழ் மொழி படத்தில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து உள்ளார். பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான காபி வித் அனு என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் அடைந்தார். இவர் நடிகை மட்டுமில்லாமல் தொகுப்பாளினி, வடிவழகி, இசைக்கலைஞர், தற்காப்பு கலை நிபுணர் என பன்முகங்கள் கொண்டவர்.

Advertisement

இந்த நிலையில் தற்போது நடிகை அனுஹாசன் அவர்கள் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்து பலரும் வாயடைத்துப் போய் உள்ளார்கள். நடிகை அனுஹாசன் அவர்கள் ஹெல்த் பிட்னஸ் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த வயதிலும் உடற்பயிற்சிகளை சரியாக கடைபிடித்து வருகிறார்.

தற்போது அவர் தான் உடற்பயிற்சி செய்த புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் இந்த வயசிலும் நடிகை அனுஹாசன் எப்படி அசத்துகிறார் என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். தற்போது இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement