எனக்கு நடிப்பு வரலன்னு ரிஜெக்ட் பண்ணிட்டாங்க, ஆனால் - நடிகை அனுபமா பரமேஸ்வரன் எமோஷனல்

By subhashini · 20/8/2025

சினிமா கேரியர் பற்றி நடிகை அனுபமா பகிர்ந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்து இருந்த பிரேமம் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் தான் அனுபமா சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்து இருந்தது.

பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் தனுஷ் நடித்த கொடி என்ற படத்தில் அனுபமா நடித்து இருந்தார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தமிழில் கொடி படத்திற்கு பின்னர் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கில் இவர் நிறைய படங்களில் பிஸியாக நடித்து இருக்கிறார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுபமா தமிழில் தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்து இருந்தார். அதற்கு பின் அனுபமா அவர்கள் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

அனுபமா திரைப்பயணம்:

அந்த வகையில் கடந்த ஆண்டு தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் இயக்கத்தில் வெளியாகி இருந்த ட்ராகன் படத்தில் அனுபமா நடித்திருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருந்தது. இதை அடுத்து இவர் தில்லு ஸ்கொயர் என்ற படத்திலும் நடித்திருந்தார். அதன் பின் சமீபத்தில் வெளியான ஜானகி vs ஸ்டேட் ஆப் கேரளா என்ற மலையாள படத்தில் அனுபமா நடித்து இருந்தார். இந்த படத்தில் சுரேஷ்கோபி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அனுபமா பேட்டி:

இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது நடிகை அனுபமா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பைசன். இந்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் தான் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோவாக துருவ் விக்ரம் நடிக்கிறார். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் எடுத்து இருக்கிறார். கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது.

வாய்ப்பு நிராகரிப்பு:

இப்படி இருக்கும் நிலையில் பைசன் படம் தொடர்பாக நடிகை அனுபமா அளித்த பேட்டியில், நான் பட வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த நேரத்தில் முதன் முதலாக ஒரு கதாபாத்திர தேர்விற்கு சென்றிருந்தேன். என்னிடம் ஒரு புகைப்படம் மட்டும் தான் இருந்தது. நடிப்பதற்கு ஒரு வீடியோ கூட இல்லை. அங்கு போன பிறகு தான் ஸ்கிரிப்ட்டை கையில் கொடுத்து நடிக்க சொன்னார்கள். அப்போதுதான் ஸ்கிரிப்ட் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரிந்தது. அதை படித்துவிட்டு ஆக்சன் என்று சொன்னவுடன் நான் நடித்தேன்.

நடிப்பு பற்றி சொன்னது:

சரியில்லை என்று மீண்டும் நடிக்க சொன்னார்கள். மறுபடியும் நடித்தேன். அவர்களுக்கு அது பிடிக்கவே இல்லை. மூன்றாவது முறையாகவும் நடித்தேன். அதற்கு அவர்கள், சரி நல்லா நடிச்சீங்க, பார்த்துக் கொள்ளலாம், நாங்கள் கூப்பிடுகிறோம் என்று சொல்லிவிட்டார்கள். அதற்குப் பிறகு அவர்கள் கூப்பிடவே இல்லை. நிச்சயம் வாய்ப்பு கிடைக்காதது என்று தெரிந்து விட்டது. அதற்கு பிறகு தான் நான் கண்ணாடி பார்த்து நடிக்க பழகினேன். என் வாழ்வில் நான் முதன் முறையாக சந்தித்த நிராகரிப்பு அதுதான். அது என்றுமே மறக்க முடியாது என்று கூறியிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full