பைசன் வெறும் படமல்ல, அது ஒரு உணர்வு - நடிகை அனுபமா பரமேஸ்வரன் உருக்கமான பதிவு

By subhashini · 28/10/2025

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக திகழும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் பைசன். இந்த படத்தில் பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு நிவாஸ். கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன் இருவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள்.

கபடி விளையாட்டை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதோடு கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளிவந்த இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அனுபமா பரமேஸ்வரன்.

பைசன் படம்:

இந்நிலையில் பைசன் படத்தில் நடித்தது தொடர்பாக அனுபமா அவர்கள் உருக்கமான பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், பைசன் படத்தில் பத்து நாட்கள், என்னுடைய இதயம் இன்னும் தனக்கு கிடைத்த அன்பை எப்படி தக்க வைத்துக் கொள்வது என்பதை கற்றுக் கொண்டிருக்கிறது. சில படங்கள் வெறும் ப்ராஜெக்டுகளாக இருப்பது கிடையாது. அவை ஒரு உணர்வாக, ஒரு பருவமாக, நமக்குள்ளே ஒரு அமைதியான மாற்றமாக மாறிவிடுகின்றது.

அனுபமா பதிவு:

பைசன் எனக்கு அப்படித்தான் ஒரு உணர்வை தருகிறது. என் வாழ்நாள் முழுவதும் நான் போற்றும் வகையில் என்னை பாதித்த ஒரு படம். இந்த உலகத்தில் வாழ்வதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டவள் ஆகவும், அதிர்ஷ்டசாலியாகவும் உணர்கிறேன். மாரி செல்வராஜ் சார், இந்த கதைக்கு என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. உங்கள் நம்பிக்கைக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். நமது சூப்பர் ஸ்டார் துருவ் விக்ரம் வாழ்த்துக்கள். இது அதிர்ஷ்டம் கிடையாது. உழைப்பால் சம்பாதிக்கப்பட்டது. இந்த வெளிச்சத்தின் ஒவ்வொரு துளிக்கும் நீங்கள் தகுதியானவர்.

View this post on Instagram

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96)

நன்றி தெரிவித்த அனுபமா:

என் சக நடிகை ரஜிஷா விஜயன், இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா, தயாரிப்பு நிறுவனம் ஆகியோருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடைசியாக என்னுடைய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையுடன் உருவாக்கப்பட்ட ஒரு படத்தை அரவணைத்து அதை இவ்வளவு கொண்டாடி திரையில் மட்டுமில்லாமல் உங்கள் இதயங்களிலும் இடம் அளித்த ரசிகர்களுக்கு என்னுடைய நன்றி. பைசன் எப்போதுமே ஸ்பெஷல் ஆக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full