அந்த படத்துல நடிச்சது தான் நான் செஞ்ச பெரிய தப்பு - நடிகை அனுஷ்கா ஷெட்டி ஓபன் டாக், அதிருப்தியில் ரசிகர்கள்

By subhashini · 17/9/2025

தென்னிந்திய சினிமா உலகில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் அனுஷ்கா. இன்றும் ரசிகர்களின் கனவு கன்னியாக அனுஷ்கா திகழ்ந்து இருக்கிறார். இவர் முதலில் தெலுங்கு திரையுலகில் தான் அறிமுகமாகி இருந்தார், அதன் பின் இவர் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி பிரபலமானார். அதன் பின்னர் இவர் ரஜினி, அஜித், விஜய், விக்ரம் என்று தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார்.

மேலும், சினிமாவில் நுழைந்த ஆரம்பகட்டத்தில் நடிகை அனுஷ்கா கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். பின் கதைக்கு ஏற்றவாறு நடிக்க தொடங்கினார். இருந்தாலும், இவரை இந்திய முழுவதும் பிரபலமாக்கியது ‘பாகுபலி’ படம் தான். இந்த படத்தை ராஜமவுலி இயக்கியிருந்தார். இந்த படம் பல சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய வசூல் சாதனையை செய்திருந்தது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் மூலம் அனுஷ்கா மக்கள் மத்தியில் தேவசேனாகவே பதித்து விட்டார்.

அனுஷ்கா திரைப்பயணம்:

அதோடு இந்த படத்தின் மூலம் தான் அனுஷ்கா ஷெட்டிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. இதனை அடுத்து இவர் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த “பாகமதி” என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதற்கு பிறகு அனுஷ்கா பெரிதாக படங்கள் எதிலும் நடிக்கவில்லை. அதற்கு காரணம், இவரின் உடல் எடை அதிகரித்தது. அனுஷ்கா அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பின் நீண்ட இடைவெளிக்கு பின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி படத்தின் மூலம் அனுஷ்கா கம்பேக் கொடுத்திருக்கிறார்.

அனுஷ்கா படங்கள்:

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் காதி. இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஜெகபதி பாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருந்தாலும் இந்த படத்தில் அனுஷ்காவின் ஆக்சன் காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இதை அடுத்து இவர் சில படங்களில் கமிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.

அனுஷ்கா பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அனுஷ்கா தன்னுடைய வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறை பற்றி பேசுகிறார். அதில் அவர், நான் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் பாலகிருஷ்ணா உடன் சேர்ந்து ஒத்த மகாடு என்ற படத்தில் நடித்திருந்தேன். அதுதான் நான் என்னுடைய கேரியரில் செய்த மிகப்பெரிய தவறு. அப்போது நான் விவரம் தெரியாமல் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அது எனக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி இருந்தது என்று கூறி இருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full