தெலுங்கு திரையுலகில் 2005-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘சூப்பர்’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக நாகர்ஜுனா நடித்திருந்தார். இப்படத்தில் நடிகைகள் ஆயிஷா டகியா மற்றும் அனுஷ்கா ஷெட்டி என டபுள் ஹீரோயின்ஸ் நடித்திருந்தனர். இது தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம் இதனைத் தொடர்ந்து சுமனின் ‘மகா நந்தி’, ரவி தேஜாவின் ‘விக்ரமார்குடு’, விஷ்ணு மஞ்சுவின் ‘அஷ்ட்ரம்’ என அடுத்தடுத்து சில தெலுங்கு படங்களில் நடித்தார் அனுஷ்கா ஷெட்டி.

அதன் பிறகு தெலுங்கு திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை அனுஷ்கா ஷெட்டி, அடுத்ததாக தமிழ் திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார். தமிழில் 2006-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘இரண்டு’. இது தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி தமிழ் திரையுலகில் என்ட்ரியான முதல் திரைப்படமாம். இந்த படத்தினை பிரபல இயக்குநர் சுந்தர்.சி இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக மாதவன் நடித்திருந்தார். ‘இரண்டு’ படத்துக்கு பிறகு ‘வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத் திருமகள், தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், லிங்கா, என்னை அறிந்தால், பாகுபலி’ போன்ற பல தமிழ் படங்களில் நடித்தார் அனுஷ்கா ஷெட்டி.

இதையும் பாருங்க : 10 வயது மகன் இருக்கும் நிலையில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த வரலாறு பட நடிகை கனிகா

Advertisement

இப்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை அனுஷ்கா ஷெட்டி. அனுஷ்கா ஷெட்டிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இடையில் கொஞ்சம் கொண்டாக மாறி இருந்த அனுஷ்கா, யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தார். நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு இரண்டு அண்ணன்கள் இருப்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம்.

ஆம், நடிகை அனுஷ்காவிற்கு குனரஞ்சன் ஷெட்டி மற்றும் சாய் ரமேஷ் ஷெட்டி என்ற இரண்டு அண்ணன்கள் இருக்கின்றனர். இதில் ஒரு அண்ணனா குனரஞ்சன் ஷெட்டி ஜெய கர்நாடக என்ற கட்சியில் இருக்கிறார். மற்றொரு அண்ணனான சாய் ரமேஷ் ஷெட்டி, காஸ்மெட்டிக் சர்ஜனாக இருக்கிறார். ஒரு அண்ணன் அரசியல் வாதி ஒன்னொரு அண்ணன் மருத்துவர். அனுஷ்கா வெய்ட்டு கை தான் போல.

Advertisement
Advertisement