தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு காரணம் இவர் தான் - மனம் திறந்து பாவனா பகிர்ந்த விஷயம்
தமிழ்-தெலுங்கு சினிமா பற்றி நடிகை பாவனா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. இவர் தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பின்னர் இவர் பல படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து உள்ளார்.
இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் அவர்கள் கூலிப் படையை விட்டு ஏவி பாவனாவை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சமூக ஊடகத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. இது அனைவருக்கும் தெரிந்த அன்று. இந்த பிரச்சனை காரணமாக பிரபல மலையாள நடிகர் திலீப் அவர்களை கைது செய்து 85 நாள்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு 6 வருடமாக நடந்து கொண்டு இருக்கிறது. அதன் பின்னர் தான் பாவனா அவர்கள் தனது நீண்ட நாள் காதலன் நவீனை திருமணம் செய்து கொண்டார்.
பாவனா குறித்த தகவல்:
திருமணத்திற்கு பிறகு நடிகை பாவனா அவர்கள் சினிமாவிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டு இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் ரிஎன்ட்ரி கொடுத்துஇருந்தார் . தமிழில் விஜய் சேதுபதி– திரிஷா நடிப்பில் வெளியான “96” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கன்னட மொழியில் ரீமேக் செய்து இருந்தார்கள். இந்த படத்தில் நடிகை பாவனா அவர்கள் திரிஷா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதை தொடர்ந்து இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
தமிழ் ரீ என்ட்ரி பாவனா:
தமிழில் இவருடைய நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. கடைசியாக இவர் தமிழில் அசல் படத்தில் தான் நடித்திருந்தார். தற்போது இவர் தி டோர் என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். 16 வருடங்களுக்குப் பிறகு இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்க இருக்கிறார். இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் பாவனா, நான் தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலமாகத்தான் அறிமுகம் ஆனேன். இந்த படம் எனக்கு தமிழில் கிடைத்த முதல் வாய்ப்பு கிடையாது.
பாவனா பேட்டி:
இதற்கு முன்னாடியே தமிழில் இருந்து நிறைய கதை வந்தது. அப்போது என்னுடைய அப்பா சினிமா துறையில் தான் இருந்தார். அவருக்கு சினிமா பற்றி எல்லாம் நன்றாகவே தெரியும். தமிழ் சினிமாவில் எங்களுக்கு அப்போ யாரையும் பெரிதாக தெரியாது. அதனால் எங்களுக்கு கொஞ்சம் தமிழில் நடிப்பதற்கு தயக்கத்தை கொடுத்தது. மிஸ்கின் சார் என்னுடைய புகைப்படத்தை பார்த்து தான் என்னிடம் கதை சொல்வதற்கு திருவனந்தபுரம் வந்தார். இந்த கதையை கேளுங்கள். அதற்கு பின் பதில் சொல்லுங்கள் என்றார். நானும் அவருடைய கதையை கேட்டேன். கதையும் என்னுடைய கதாபாத்திரமும் பிடித்து போய் நடிக்க வந்தேன். அதற்கு பிறகு தான் சித்திரம் பேசுதடி படத்தில் கதாநாயகியாக நடித்தேன்.
https://www.youtube.com/watch?v=wigrXOZC03Q
தமிழ் - தெலுங்கு சினிமா பற்றி சொன்னது:
மிஸ்கின் சார் என்னுடைய புகைப்படத்தை ஏதோ ஒரு மலையாள பத்திரிகை அட்டை படத்தில் தான் பார்த்திருக்கிறார். அதேபோல் தெலுங்கு சினிமாவில் நான் தொடர்ந்து நடிக்காததற்கு காரணம், அன் கம்போர்ட்டபிளாக இருக்கலாம். அவர்கள் சொன்ன கதையும் கதாபாத்திரமும் எனக்கு ரிலேட் பண்ண முடியாமல் இருந்திருக்கலாம். அப்போ அது கிளாமர் ஆதிக்கம் நிறைய செலுத்தின துறையாக இருந்தது. கம்போர்ட் இல்லை என்றால் பண்ணக்கூடாது என்று தான் நான் தெலுங்கு சினிமாவில் அதிகமாக படங்கள் பண்ணவில்லை என்று பல விஷயங்களை மனம் திறந்து கூறியிருக்கிறார்.