இத்தனை வருடம் தமிழில் நடிக்காமல் இருக்க காரணம் இது தான் - நடிகை பாவனா ஓபன் டாக்

By subhashini · 5/3/2026

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. இவர் தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பின்னர் இவர் பல படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். இதனிடையே இவர் தனது நீண்ட நாள் காதலன் நவீனை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிகை பாவனா அவர்கள் சினிமாவிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டு இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் ரிஎன்ட்ரி கொடுத்து இருக்கிறார். அதை தொடர்ந்து இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
தமிழில் இவருடைய நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. தற்போது நடிகை பாவனா நடிப்பில் மலையாளத்தில் வெளியாகிருக்கும் அனுமி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

பாவனா குறித்த தகவல்:

இந்த படத்தை ரியாஸ் இயக்கியிருக்கிறார். துப்பறியும் கதையாகவும் அறிவியல் பூர்வமான பின்னணியும் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றதால் தமிழிலும் டப் செய்யப்பட்டு மார்ச் 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படம் தொடர்பாக சென்னையில் அளித்த பேட்டியில் பாவனா, தமிழில் நடிக்க கூடாது என்று எந்த எண்ணமும் எனக்கு கிடையாது. நல்ல கதைகள் அமைந்தால் கண்டிப்பாக தொடர்ந்து நடிப்பேன்.

பாவனா பேட்டி:

மலையாளம் மற்றும் கன்னட படங்களில் பிசியாக இருந்ததால் தான் தமிழில் சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டேன். அனுமி படத்தின் திரைக்கதை ரொம்ப சுவாரசியமாக இருந்ததால் இதில் நடிக்க ஒற்றுக் கொண்டேன். இந்த படத்தில் நடிகர் ரகுமான் ஒரு முக்கிய புலனாய்வு அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஒரு பகுதியை நான் தயாரித்து இருக்கிறேன். ஒரு கட்டத்தில் தயாரிப்பில் இணைய முடியுமா? என்ற படக்குழு கேட்டபோது படமாக்கப்பட்ட காட்சிகளின் தரத்தை பார்த்து எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

நடிக்காத காரணம்:

அதனால்தான் இதில் தயாரிப்பாளராகவும் பங்கெடுக்க தீர்மானித்தேன். இந்த படத்தை பொருத்தவரை கதைதான் முக்கிய ஹீரோ. அதில் நாங்கள் அனைவரும் கதாபாத்திரங்களாக பங்களித்திருக்கிறோம். வெறும் பெண் மைய கதாபாத்திரம் என்பதற்காக மட்டும் இந்த படத்தை கண்மூடித்தனமாக ஒற்றுக்கொள்ளவில்லை. நல்ல கதை என்பதால் தான் நடித்தேன். இந்த படத்திற்கு கேரள மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாட்டில் ரசிகர்களிடமும் கிடைக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் தமிழ் ரசிகர்களுக்காக நல்ல கதையுடன் படங்களில் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full