மீண்டும் கதாநாயகியாக அவதாரமெடுக்கும் பாவனா..!அதுவும் இந்த சூப்பர் ஹிட் பட ரீ-மேக்கில்..!

By Rajkumar · 14/12/2018

தமிழில் 'சித்திரம் பேசுதடி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை  பாவனா.அதன் பின்னர் 
தீபாவளி, அசல், ஜெயம் கொண்டான், சித்திரம் பேசுதடி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் பல மலையாலப் படங்களில் நடித்துள்ளார்.

கடந்த வருட துவக்கத்தில் பாவனாவை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த பிரச்சனை காரணமாக பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். இந்த கேஸ் தற்போது வரை நடந்து கொண்டிருக்கிறது.

அதன் பின்னர், கடந்த ஆண்டு ஏப்ரல் மதம் 22ஆம்  தேதி பாவனாவின் நீண்ட நாள் காதலன் நவீன் என்ற திரைப்பட தயாரிப்பாளருடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் ஒரு சில படங்களில் அவ்வப்போது தலை காண்பித்து வந்தார் பாவனா. 

தமிழில் விஜய் சேதுபதி-திரிஷா நடித்து வெற்றி பெற்ற 96 படத்தின் கன்னட ரீமேக்கில் திரிஷா வேடத்தில் அவர் நடிக்கிறார். இதில் விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் கணேஷ் நடிக்கிறார். பிரீத்தம் குப்பி இயக்குகிறார். 

Tamil Behind Talkies AMP · Quick view
View full