எதிர்நீச்சல் சீரியலை திடீரென முடிக்க இது தான் காரணம்- உண்மையை உடைத்த முக்கிய நடிகை

By subhashini · 22/6/2024

எதிர்நீச்சல் சீரியல் சீக்கிரமாகவே முடிந்ததற்கான காரணம் குறித்து நடிகை பாம்பே ஞானம் கொடுத்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் என்றால் அது எதிர்நீச்சல் தான். வாரம் வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் தான் உச்சத்தில் இருந்தது. இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று இருந்தது. பெண்களை மையப்படுத்தி இந்த தொடரை இயக்குனர் கொடுத்திருக்கிறார். ஆணாதிக்கம் கொண்ட நபர்களின் மத்தியில் பெண்கள் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை உண்டு என்பதை சொல்லும் வகையில் இந்த சீரியல் இருந்தது. மேலும், இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற ரோலில் முதலில் மறந்த நடிகர் மாரிமுத்து தான் நடித்திருந்தார்.

எதிர்நீச்சல் சீரியல்:

இவர் கடந்த ஆண்டு மாரடைப்பால் திடீரென்று இறந்துவிட்டார். பின் அவருக்கு பதில் குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடித்து இருந்தார். சீரியல் நன்றாக தான் சென்றது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே இந்த சீரியல் உடைய டிஆர்பி ரேட்டிங் பின்தங்கி இருந்தது. இதனாலேயே ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் குறித்து நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது. அதுமட்டுமில்லாமல் குணசேகரன் கதாபாத்திரத்தை மாற்றியதால் தான் இந்த சரிவிற்கு காரணம் என்று பலருமே கூறி இருந்தார்கள்.

பாம்பே ஞானம் பேட்டி:

இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் பட்டம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை பாம்பே ஞானம் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். அதில் அவர், ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து இறந்தது பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்திருந்தது. அதற்கு பதிலாக வேலராமமூர்த்தி நடித்திருந்தார். ஆரம்பத்தில் அவர் நடித்ததற்கு விமர்சனங்கள் வந்தாலும் நாட்கள் செல்ல செல்ல மக்கள் அவரை ஏற்றுக் கொண்டார்கள்.

சீரியல் நிறுத்த காரணம்:

அதுமட்டுமில்லாமல் மாரிமுத்து மரணத்திற்கு பிறகு கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தார்கள். இதனாலே சீரியலில் டிஆர்பி குறைந்தது. அதற்குப் பின் தான் சேனலில் இருந்து சீரியலை வேறொரு நேரத்திற்கு மாற்றும் படி கூறியிருந்தார்கள். அதற்குப் பின் தான் இயக்குனர் ஒரு முக்கிய முடிவெடுத்தார். கடைசியில் அவர் சீரியலே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று முடித்து விட்டார் என்று கூறியிருந்தார்.

பாம்பே ஞானம் குறித்த தகவல்:

மேலும், இந்த எதிர்நீச்சல் சீரியலில் தொடக்கத்தில் அமைதியாக இருந்த பட்டம்மாள் கதாபாத்திரம் இடையில் விஸ்வரூபம் எடுத்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இவர் சிறுவயதில் இருந்தே மேடை நாடகங்களில் ஈர்ப்பு ஏற்பட இவருக்கு முழுவதுமாக அவருடைய கணவர் உதவி செய்து வந்திருக்கிறார். அதன் பின் இவர் நிறைய படங்கள், சீரியல்களில் நடித்து இருந்தார். குறிப்பாக, இவர் அவ்வை சண்முகி, ஆஹா, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, ஒருநாள் ஒருகனவு, ஜிகர்தண்டா, வெய்யில் அழகிய தமிழ்மகன், நள தயமயந்தி போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full