தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்திய நடிகை பிரிகிடா சகா - யார் தெரியுமா?

தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்திய நடிகை பிரிகிடா சகா

By subhashini · 30/6/2026

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பிரிகிடா சகா. இவர் தமிழில் ஆஹா கல்யாணம் என்ற வெப் தொடரில் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரிகிடா சகா நடித்திருந்தார். முதல் படத்திலே பிரிகிடா சகா தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அதனை தொடர்ந்து இவர் விஜயின் மாஸ்டர், அயோக்யா, தனுஷின் இட்லி கடை, மார்கன், கருடன் உட்பட பல தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழைத் தொடர்ந்து இவர் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை பிரிகிடா சகா தன்னுடைய காதலரை சோசியல் மீடியாவில் அறிவித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, வேறு யாரும் இல்லை ஆனந்த் ராம். இவர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான மீசையை முறுக்கு படத்தில் ஹிப்பாப் ஆதிக்கு தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிரிகிடா சகா குறித்த தகவல்:

அதனை தொடர்ந்து இவர் நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். பின் தன்னுடைய காதல் குறித்து நடிகை பிரிகிடா சகா போட்ட பதிவில், என்னுடைய உலகத்தின் உன்னத நட்சத்திரத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சின்ன வயதில் இருந்தே ஆக சிறந்த அழகான காதல் கதைகள் எல்லாமே சினிமா துறையில் மட்டும் தான் இருக்கும் என்று நான் எப்போதுமே நம்பி வந்தேன். படம் முடிந்து திரையில் பெயர்கள் ஓடி முடித்த பிறகும் கூட நம் மனதை விட்டு நீங்காமலேயே அந்த காட்சிகள் இருக்கும்.

பிரிகிடா சகா காதலர்:

அப்படிப்பட்ட காதல் கலைகள் நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால், வாழ்க்கை எனக்காக வேறொரு திட்டத்தை வைத்திருந்தது. சினிமாவை நோக்கி என்னுடைய சொந்த பயணத்தில் எங்கோ ஒரு புள்ளியில் எனக்கான ஒருவரை நான் கண்டுகொண்டேன். என்னைப் போலவே அவருக்கும் சினிமாவில் அதே கனவிருந்தது. அதற்கான மரியாதையும் அவரிடம் ஆழமாக இருந்தது. என்னுடைய வாழ்க்கையின் அழகாக மாறுவதற்கு முன்பே அவர் அமைதியாக என் சிறந்த நண்பராக மாறினார். மிகவும் அழகான காதல் கதைகள் எல்லாமே எப்போதும் திரைக்காக எழுதப்படுபவை கிடையாது.

காதலர் பற்றி சொன்னது:

சில கதைகள் நிஜ வாழ்க்கையிலும் சாதாரணமாக வாழப்படுபவை என்பதை இன்றைக்கு நினைவூட்டியதற்கு உங்களுக்கு நன்றி. இதோ எங்கள் வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். நாங்கள் எப்போதுமே ஒருவருக்கொருவர் ஐ லவ் யூ என்று சொல்லிக் கொள்ளும் மனிதர்களாக இருந்ததில்லை. அந்த பயணத்தில் எங்கோ ஓரிடத்தில் அந்த வார்த்தைகள் எங்களுக்குள் வேறு ஒன்றாக மாறியது. இந்த வார்த்தை எங்களுக்கு மட்டுமே சொந்தமானது. இன்று எங்கள் உலகத்தின் அந்த சிறிய பக்கத்தை உங்கள் முன்னால் திறந்து வைக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full