படப்பிடிப்பின் கடைசி நாளில் ஹோட்டலில் நடந்த சம்பவம், பெயர்களை அடுக்கிய பிரபல நடிகை
மலையாள நடிகை சார்மிளா, திரைத் துறையில் தனக்கு நடந்த துமீறல்கள் குறித்து கூறியிருக்கும் தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சமீப காலமாகவே சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மலையாள சினிமாவிலும் இந்த மாதிரி நிறைய நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சனைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்திருந்தது.
பின், இது தொடர்பாக விசாரணையும் நடத்தி இருந்தார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயனிடம் இது தொடர்பான 233 பக்க அறிக்கை ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், கடந்த 19ஆம் தேதி தான் ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டு இருந்தது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை சார்மிளா:
இந்நிலையில் மலையாள நடிகை சார்மிளா கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர், 1927 ஆம் ஆண்டு 'அர்ஜுனன் பிள்ளையும் அஞ்சு மக்களும்' படப்பிடிப்பின் கடைசி நாளில், தயாரிப்பாளர் எம்.பி .மோகனன், தயாரிப்பு மேலாளர் சண்முகம் மற்றும் இவர்களது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து என்னை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றனர். உடனே ஹோட்டல் அறையிலிருந்து எப்படியோ தப்பித்து வந்து விட்டேன். ஆனாலும் அவர்கள் எனது சேலையை பிடித்து இழுத்து கழற்ற முயன்றனர் என்று சிலரின் பெயரை குறிப்பிட்டு குற்றம் கூறியுள்ளார்.
ஹரிஹரன் குறித்து :
அதனைத் தொடர்ந்து பேசிய அவர் ஹரிஹரன், என் நண்பரும் நடிகருமான விஷ்ணுவிடம் நான் அட்ஜஸ்ட்மென்ட் செய்வேனா என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னதும் ஹரிஹரன் தனது 'பரிணயம்' படத்தில் இருந்து எங்களை இருவரையும் நீக்கி விட்டார் என்று கூறியுள்ளார். அதேபோல் இந்த விவகாரத்தின் ஒரு பகுதியாக இருந்த விஷ்ணு இப்போது ஷர்மிளா சொன்னது உண்மைதான் என்று கூறியுள்ளார். இது பற்றி பேசிய அவர், இது போல் ஒரு விருப்பம் தன் முன்பாக வைக்கப்பட்டது உண்மைதான். ஆனால், அப்போது ஷர்மிளா மறுப்பு தெரிவித்து விட்டார். நான்தான் சார்மிளாவின் மறுப்பை ஹரிஹரனிடம் சொன்னேன்.
விஷ்ணு சொன்னது:
உடனடியாக ஷர்மிளா பெயர் 'பரிணயம்' படத்திலிருந்து நீக்கப்பட்டது. அது உண்மைதான் என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து பிரபல பத்திரிக்கை வெளியிட்ட செய்தியின் படி ஷர்மிளா இதுபோல் நிறைய குற்றச்சாட்டுகள் வைத்துள்ளார். அதில் அவர், அவர்கள் என் உதவியாளர்களையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள். மேலும், எனது ஆண் உதவியாளர் ஒருவர் தாக்கப்பட்டார். நான் தங்கியிருந்த ஹோட்டல் வரவேற்பாளரும் இதில் ஈடுபட்டிருந்தார். ஒரு ஆட்டோ டிரைவர் தான் எங்களை காப்பாற்றினார். நான் தப்பித்தாலும், படத்தில் பணி புரியும் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஒருவரை அவர்கள் பலாத்காரம் செய்து விட்டனர் என்று கூறியுள்ளார்.
வாய்ப்புகள் கிடைக்கவில்லை:
மேலும் அவர், நான் நான்கு மொழிகளில் நடித்திருக்கிறேன். ஆனால் இந்த பிரச்சனைகள் முக்கியமாக மலையாள இண்டஸ்ட்ரியல் தான் இருக்கிறது. நான் ஒரு தாயாக இருந்தால் சில பொறுப்புகள் எனக்கு இருந்தன. அதன் காரணமாக புகார் கொடுப்பதில் இருந்து நான் விலகி இருந்தேன். இது போன்ற கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் எனக்கு சினிமாவில் வாய்ப்புகளே கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். தற்போது நடிகை சார்மிளா வைத்திருக்கும் குற்றச்சாட்டு தான் சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.