ஸ்ருதி நாராயணன் மீது தான் தப்பு இருக்கு, இது ரொம்ப மோசமான செயல் - ஆவேசத்தில் நடிகை ஷர்மிளா பேட்டி

By subhashini · 31/3/2025

ஸ்ருதி நாராயணன் விவகாரம் தொடர்பாக நடிகை ஷர்மிளா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாக ஸ்ருதி நாராயணன் பஞ்சாயத்து தான் சென்று கொண்டு இருக்கிறது. சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியின் தோழியாக வித்யா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் சுருதி நாராயணன். இந்த சீரியலில் இவர் ரோகினி செய்யும் எல்லா தில்லாலங்கடி வேலைக்கும் உறுதுணையாக நிற்கிறார். இவருடைய கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் சோசியல் மீடியாவில் இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகை ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பார்த்து சிலர் இது மார்ப்பிங் வீடியோ என்று கூறுகிறார்கள்.

இன்னும் சிலர் படத்தின் வாய்ப்புக்காக தான் இவர் இப்படியெல்லாம் வீடியோ செய்து வெளியிடுகிறார் என்று கூறுகிறார்கள். ஆனால், இவருடைய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது. பின் இது தொடர்பாக சுருதி நாராயணன் போட்ட பதிவில், இரண்டு பெண்கள் ஒரே முக சாயலில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் ரியல், மற்றொருவர் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது. சரியானதை கண்டுபிடிங்கள் என்று கேட்டிருக்கிறார். அதன் பின் உண்மையான பெண் யார், ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட பெண் யார் என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் தன்னைப் பற்றி பரவும் வீடியோ மார்ப்பிங் செய்யப்பட்டது என்று கூறியிருந்தார்.

சீரியல் ஸ்ருதி நாராயணன் பதிவு:

இருந்துமே விடாமல் சுருதி நாராயணனை சோசியல் மீடியாவில் மோசமாக விமர்சித்தும் திட்டியும் வருகிறார்கள். மேலும் இது தொடர்பாக ஸ்ருதி நாராயணன் பதிவில், நானும் பெண்தான். எனக்குமே உணர்ச்சிகள் இருக்கிறது. எனக்கு நெருக்கமானவர்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. அதை நீங்கள் ரொம்ப மோசமாக விமர்சித்து போடுகிறீர்கள். இப்படி காட்டுத்தீயாய் போல பரப்பாதீர்கள். வீடியோ பார்க்க வேண்டும் என்றால் உங்களுடைய அம்மா, சகோதரி அல்லது காதலி வீடியோவை பாருங்கள். ஏனென்றால் அவர்களும் பெண்தான். அவர்களுக்குமே என்னை போன்ற உடல் இருக்கிறது. கமெண்டில் என்னைத்தான் எல்லோருமே குறை சொல்கிறார்கள். அந்த வீடியோவை லிங்க் செய்தவரை எந்த கேள்வியுமே கேட்கவில்லையே ஏன்? என்று ஆக்ரோஷமாக கூறி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=Xrt8Hu2sY9I

நடிகை ஷர்மிளா பேட்டி:

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகை சர்மிளா அளித்த பேட்டியில், சினிமாவில் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெண்ணை எந்தளவுக்கு அவர்கள் மோசமாக நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் செய்த அநாகரிமான செயலை நான் எப்படி வார்த்தைகளால் செல்வதென்றே தெரியவில்லை. இதில் அந்த பெண்ணுடைய அறியாமையும் இருக்கிறது. ஒரு சீரியலோ, பட வாய்ப்புக்கோ நிச்சயம் யாருமே இந்த அளவுக்கு கேவலமாக நடந்து கொள்ள மாட்டார்கள். இது ஒரு தனி நபருடைய ஆசையை தீர்த்துக் கொள்வதற்காக செய்த காரியம். சுருதி நாராயணனுக்கு என்ன பணக்கஷ்டமோ, வேறு ஏதாவது கஷ்டம் இருக்கிறதா என்று தெரியவில்லை. என்ன இருந்தாலும் அவர் செய்தது ஒரு தவறான செயல்தான்.

ஸ்ருதி நாராயணன் பற்றி சொன்னது:

அது அறியாமல் செய்த செயல். எந்த அளவுக்கு அந்த வீடியோ எடுத்தவர் செய்திருந்தால் ஸ்ருதி நாராயணனை இப்படி செய்திருப்பார். ஒரு சர்க்கஸில் ஒரு மிருகத்தை கையாள்வது போல அந்த நபர் சுருதியை கையாண்டிருக்கிறார். நாங்கள் எல்லாம் கேமரா முன்னால் வந்திருக்கிறோம். இதை செய்தா இங்கு வந்திருக்கிறோம். உண்மையில் சினிமாவை விட சீரியல்தான் மோசமானது. இதை எனக்கு தெரிந்த சீரியல் நடித்த ஒரு பெண்ணை என்னிடம் சொன்னார். ஒரு நாள் அவள் என்னிடம், நான் ஒரு சீரியலில் நடித்தேன். அந்த சீரியல் தயாரிப்பாளரின் நண்பர் வாய்ப்பு தருவதாக சொல்லி மோசமாக பேசினார் என்றார்.

https://www.youtube.com/watch?v=MbVD_uMmElY

பெண்கள் நிலைமை:

சினிமாவில் நீங்கள் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தீர்கள் என்றால் அங்கு தயாரிப்பாளர் உங்களிடம் வேறு ஏதாவது எதிர்பார்த்தால் நீங்கள் முடியாது என்று சொல்லும் பட்சத்தில் அடுத்த படத்தில் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சீரியலில் டிஆர்பி ரேட்டிங் அதிகம் ஆகும் போது தான் உங்களுக்கு இந்த மாதிரியான பிரச்சனைகள் வரும். நீங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் உங்களை பார்ப்பார்கள். அதனால் இயல்பாகவே அந்த ரோலில் யார் நடிக்கிறாரோ அவர் அதனை தக்க வைத்துக் கொள்ள ஆசை வரும். அந்த ஆசையை தான் இது போன்ற தவறானவர்கள் பயன்படுத்தினார்கள். அந்த பெண் அது மறுக்கும் பட்சத்தில் நீ இல்லையா, இன்னொரு ஹீரோயினை போட்டுக்கொள்ளலாம் என்று சொல்லி மாற்றி விடுவார்கள். இதுதான் சீரியலில் நடக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full