சரிகமப நிகழ்ச்சி மேடையிலேயே கண்கலங்கிய நடிகை தேவையானி - அடடே, என்ன ஆச்சு தெரியுமா?

By subhashini · 31/5/2025

சரிகமப நிகழ்ச்சியில் தேவையானி தன் மகளுடன் கலந்து இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு விதமான பாடல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. வருடம் வருடம் வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் பல வருடமாக விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

அதேபோல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பாடல் நிகழ்ச்சி தான் சரிகமப. இந்த நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பாடகர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளும் கிடைத்து இருக்கிறது. அர்ச்சனா தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்ற இரண்டு பிரிவுகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

சரிகமப நிகழ்ச்சி:

மேலும், சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் ஜூனியர் கான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி நடைபெற்றது. சில வாரங்களுக்கு முன் தான் இந்த நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது. இதில் திவினேஷ் தான் டைட்டில் பட்டத்தை வென்றிருந்தார். இவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் இவருக்கு மெல்லிசை இளவரசன் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் தான் திவினேஷிக்கு டைட்டில் பட்டதை வழங்கியிருந்தார்.

சரிகமப சீசன் 5 நிகழ்ச்சி:

இவரை அடுத்து இரண்டாவது இடத்தை யோகஸ்ரீ மற்றும் மூன்றாவது இடத்தை ஹேமித்ரா பிடித்திருந்தார்கள்.
தற்போது சீனியர்களுக்கான ஐந்தாவது சீசன் தொடங்கி இருக்கிறது. இந்த சீசனையும் வழக்கம்போல் அர்ச்சனா தான் தொகுத்து வழங்கினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன், கார்த்திக் ஆகியோ நடுவர்களாக இருக்கிறார்கள். மெகா ஆடிஷன் என்பதால் டி.ஆர். ராஜேந்திரன் சிறப்பு நடுவராக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.

தேவையானி மகள் என்ட்ரி:

மெகா ஆடிசன் நடந்தது. அதில் 12 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதை தொடர்ந்து இந்த வாரம் பிரம்மாண்ட மெகா ஆடிசன் மீண்டும் தொடர்கின்றது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தேவயானியின் மகள் இனியா போட்டியாளராக தேர்வாகியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, மெகா ஆடிஷனில் நடுவர்கள் கண்ணை கட்டிக் கொண்டுதான் போட்டியாளர்களின் பாடலை கேட்டு தேர்வு செய்வார்கள். அந்த வகையில் நடுவர்கள் கண்ணை கட்டிக் கொண்டிருக்கும்போது தேவயானி தன்னுடைய மகளுடன் மேடைக்கு சத்தமே இல்லாமல் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=RpBOdqY-m2w

வைரலாகும் வீடியோ:

அதற்குப்பின் தேவையானியின் மகன் இனியா தன்னுடைய இனிமையான குரலால் பாடி இருக்கிறார். அவர் பாட்டை கேட்டவுடன் நடுவர்கள்தேர்வு செய்து கண்களை திறந்து பார்த்திருக்கிறார்கள். அப்போதுதான் தேவையானி மேடையில் அமர்ந்திருப்பது தெரிகிறது. அதற்குப் பிறகு நடுவர்கள், நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு காரணம் என்ன? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு தேவையானி, என் மகள் தன்னுடைய சொந்த முயற்சியில் தான் முன்னேற வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இந்த மேடை எல்லோருக்கும் அவ்வளவு எளிதாக கிடைக்காது. பல வெற்றியாளர்களை உருவாக்கிய மேடை என்று சொல்லி தன் மகளை ஆனந்தக் கண்ணீரில் கட்டி அனைத்து முத்தம் கொடுத்து இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full