'அம்மா கொடுத்த பொக்கிஷம் அது' - நடிகை தேவயானி எமோஷனலாக பகிர்ந்த விஷயம் ‌

By krithika · 30/1/2025

பிரபல நடிகை தேவயானி சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தேவயானி. இவர் மும்பையை சேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் சுஷ்மா .1993 ஆம் இவருடைய இவர் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். தற்போது வரை இவர் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் ‘தொட்டா சிணுங்கி’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதற்கு பிறகு இவர் சில படங்களில் நடித்தார். ஆனால், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாகியது அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த ‘காதல் கோட்டை’ படம் தான்.

இவர் இயக்குனர் ராஜ்குமாரன் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தேவயானி அவர்கள் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் முதல் முறையாக இயக்கியிருந்த 'கைக்குட்டை ராணி' என்னும் குறும்படம், 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான விருதினை வென்றது. அதற்கு பலரும் தேவயானிக்கு பாராட்டுகளை தெரிவித்திருந்தார்கள். இதையொட்டி தற்போது தேவயானி பல நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார்.

தேவயானி பேட்டி:

அந்தவகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தேவயானி, எனக்கு வாழ்க்கையில் நிறைய எக்ஸ்பிரிமெண்ட்கள் பண்ண பிடிக்கும். அது எனக்கு ரொம்ப சுவாரசியமாக இருக்கும். ஒரு சின்ன குழந்தை பிறந்த உடனே வாழ்க்கையில் உட்காருவது, நடப்பது என்று எத்தனை எக்ஸ்பிரிமெண்ட்கள் பண்ணுது. அதை விடவா நம்ம எக்ஸ்பிரிமெண்ட் பண்ண முடியும். 'கைக்குட்டை ராணி' படத்திற்காக முதலில் 'ஆக்சன்' என்று சொல்லும் போது என்னால் நம்பவே முடியவில்லை. முதல் தடவை அந்த வார்த்தை சொல்றதுக்கு வெட்கமாக இருந்தது. ஏனென்றால், ஆக்சன் மற்றும் பேக்கப் எல்லாம் டைரக்டர்கள் மட்டும்தான் சொல்ல முடியும். அந்த அளவுக்கு அது பவர்ஃபுல்லான வார்த்தைகள்.

கைக்குட்டை ராணி குறித்து:

மேலும், இந்தப் படம் அப்பாவுக்கும் ஒரு சின்ன பொண்ணுக்கும் இடையேயான கதை தான். அந்த பொண்ணுக்கு 6 வயசு ஆகுது. அப்பா வெளியூரில் வேலை செய்கிறார். மாதத்துக்கு ஒருமுறை மட்டும் வீட்டுக்கு வருவார். அந்தப் பொண்ணு, அவங்க அப்பாவை எவ்வளவு மிஸ் செய்றா. தாய் இல்லாத ஒரு குழந்தை தாத்தா பாட்டியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது. அப்பா வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறது, ஏங்குவது தான் 'கைக்குட்டை ராணி' யோட கதை என்று கூறியிருக்கிறார். அந்த படத்துல அப்பா கொடுத்த கைகுட்டையை அவள் எப்போதும் பொக்கிஷமாக வைத்திருப்பாள்.

அப்பா -அம்மா கொடுத்த பொக்கிஷம்:

அந்த மாதிரி எங்க அப்பாவும் அம்மாவும் எனக்கு கொடுத்தது எல்லாமே பொக்கிஷம்தான். குறிப்பாக அவர்களுடைய புகைப்படங்களை நான் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். அவர்களுடையது மட்டும் கிடையாது, என்னுடைய தாத்தா பாட்டி, அவர்களுடைய தாத்தா பாட்டி என இரண்டு ஜெனரேஷன் போட்டோகிராப்கள் நான் நிறைய வைத்திருக்கிறேன். அதே மாதிரி, எங்க அம்மா வைத்திருந்த பூஜை சாமான்கள், சின்ன சின்ன சிலைகள் எல்லாம் நான் தான் இப்ப வரைக்கும் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.பின், வாழ்க்கையில் நான் வருத்தப்படுற ஒரு விஷயம் என்றால், என்னுடைய பெற்றோர்களுக்கு தெரியாமல் நான் திருமணம் செய்து கொண்டது தான்.

https://www.youtube.com/watch?v=TL76YIsGXR8

இந்த வருத்தம் இருக்கு:

அது கண்டிப்பாக அவங்களுக்கு வருத்தம் கொடுத்து இருக்கும். அதுக்கப்புறம் அவங்க என்னை மன்னித்து விட்டார்கள். ஆனால், அந்த ஒரு விஷயத்தால் கண்டிப்பாக நான் அவர்களை கஷ்டப்படுத்தி இருப்பேன். இப்ப வரைக்கும் பழைய தேவயானி மாதிரியே இருக்கேன் என்று சொல்றாங்க. அதற்கு காரணம் நான் அளவாக சாப்பிடுவேன், நேரத்திற்கு தூங்குவேன், நன்றாக நடப்பேன், ஆக்டிவா வாழ்க்கையை வாழ்வேன், சோம்பேறித்தனமாக இருக்க மாட்டேன், தேவையில்லாததை சாப்பிட மாட்டேன். சோசியல் மீடியாவில் நான் இல்லை. அதுவே எனக்கு ஒரு ஸ்ட்ரஸ் ப்ரீ ஆக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full