தமிழ் சினிமாவின் அக்கா தம்பி பிரபலங்களான தேவயானி, நகுல் ஆகியோரின் தாயார் காலமானார்.!

By Rajkumar · 8/9/2019

சினிமாவில் 90-ஸ்களில் வெளிவந்த படங்களில் விஜய், அஜித், என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தேவயானி. இவர் மும்பையை சேர்ந்தவர். இவரது அப்பாவின் பெயர் ஜெயதேவ். இவருக்கு இரண்டு தம்பிகள் உள்ளனர். அதில் நகுலும் நடிகர் என்பது பலரும் அறிந்த ஒன்று.

தமிழில் முன்னணி நடிகையாக திகழ்ந்த தேவையணி படங்களின் வாய்ப்பு குறையவே திருமணத்திற்கு பிறகு சீரியல் பக்கம் காலடி வைத்தார் , அங்கேயும் வெற்றி பெற்றார் . இவருடைய தம்பி நகுல் தொடக்கத்தில் நடித்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இப்போது வெற்றிக் கொடுக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நகுல் மற்றும் தேவையானியின் தாய் லட்சுமி இன்று ()காலை காலமாகியுள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்டவர் லட்சுமி. இவர் கர்நாடகா மாநிலம் மைசூருவை சேர்ந்த ஜெயதேவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு மும்பையில் வசித்து வந்த இவர்களுக்கு தேவயானி, நகுல், மையூர் என 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் சோகமான விஷயம் என்னவெனில் கடந்த ஆண்டு தான் நகுல், தேவையானியின் தந்தை காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full