அர்னவின் முன்னாள் மனைவின்னு சொல்லாதீங்க, விவாகரத்து ஆகல- நடிகை திவ்யா சொன்ன பகீர் தகவல்

By subhashini · 31/10/2024

அர்னவ் குறித்து அவரின் மனைவியும் நடிகையுமான திவ்யா வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருந்தது அர்னவ்-திவ்யா விவகாரம் தான். இவங்க வேற யாரும் இல்லைங்க, செல்லம்மா சீரியல் நடிகர் அர்னவ், செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா. இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து இருந்தார்கள். பின் கடந்த ஆண்டு தான் இவர்கள் திருமணம் செய்து இருந்தனர்.

இவர்கள் இருவரும் இதற்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற தொடரில் நடித்து இருந்தார்கள். அதோடு இதற்கு முன்பே திவ்யாவிற்கு திருமணம் ஆகி 5 வயதில் மகள் இருக்கிறார். இவருடைய முதல் திருமணத்தில் என்ன பிரச்சனை? எப்படி விவாகரத்தானது? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. பின் இவர் இரண்டாவதாக அர்னவை திருமணம் செய்து கொண்டார். மேலும், திருமணம் ஆகி கொஞ்ச நாட்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதை திவ்யா அறிவித்து இருந்தார்.

திவ்யா-அர்னவ் சர்ச்சை:

இப்படி ஒரு நிலையில் அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருந்தார்.
அதோடு அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதை கேட்டதற்கு அர்னவ் தன்னை தாக்கியதால் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறி இருந்தார். அதன் பின் அர்னவ் மீது போலீசில் திவ்யா புகார் கொடுத்து இருந்தார். அதன் பின் திவ்யா மீது அர்னவ் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். இப்படி இருவருமே மாற்றி மாற்றி பேட்டி கொடுத்திருந்தார்கள்.

திவ்யா கொடுத்த புகார்:

இதை தொடர்ந்து திவ்யா அளித்த புகாரின் பெயரில் போலீசார் அர்னவ் மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து இருந்தார்கள். பின் அர்னவ் ஜாமினில் வெளியில் வந்தார். வெளியில் வந்த பின்னரும் கர்ப்பமாக இருந்த திவ்யாவை அர்னவ் கண்டுகொள்ளவே இல்லை. இவர்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்டதற்கு முழுக்க முழுக்க காரணம் செல்லம்மா சீரியலில் நடித்த அன்ஷிதா தான் என்று கூறப்பட்டது. திவ்யாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. தற்போது இருவரும் தனி தனியாக தான் வாழ்ந்து வருகிறார்கள்.

திவ்யா பகிர்ந்த வீடியோ:

இந்த நிலையில் நடிகை திவ்யா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர், நிறைய பேர் அர்னவை என்னோட முன்னாள் கணவர் என்று சொல்கிறார்கள். அதை முதலில் தெளிவுபடுத்த தான் இந்த வீடியோ. எங்க ரெண்டு பேருக்குமே சட்டபூர்வமாக விவாகரத்து ஆகவில்லை. இருவரும் பிரிந்து தனித்தனியாக தான் வாழ்கிறோம். அவ்வளவுதான். எனக்கு எல்லாமே என் குடும்பம் தான். சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய அம்மா உடம்பு முடியாமல் இருந்துவிட்டார். அதனால் இந்த வருஷம் எங்களுக்கு எந்த பண்டிகையுமே கிடையாது.

View this post on Instagram

A post shared by Divya Shridhar (@divya_shridhar_1112)

தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சொன்னது:

என்னுடைய அப்பா தான் பிள்ளைகளை பார்த்துக் கொள்கிறார். செவ்வந்தி சூட்டிங்கில் பிசியாக இருந்த போது சீரியல் ப்ரொடக்ஷன் டீம் எனக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருந்தார்கள். எனக்கு ஏற்ற மாதிரி கதைக்களத்தை மாற்றி தந்தார்கள். அதனால் அவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். சிங்கிள் மதரா குழந்தைகளை வளர்ப்பது ரொம்ப கஷ்டம். இருந்தாலும் எல்லாத்தையும் எதிர்கொண்டு இருக்கிறேன். என்னுடைய இரண்டு பெண் குழந்தைகளுக்காக வாழுவது ரொம்ப சந்தோசமாக இருக்கு. யாரையும் நம்பாதீர்கள், அதுதான் நான் உங்களுக்கு கொடுக்கிற அறிவுரை. நீங்க எல்லோரும் உண்மை பக்கம் இருந்திருக்கீங்க. எனக்கு உறுதுணையாக பக்கபலமாக இருந்திருக்கீங்க. உங்க எல்லோருக்குமே என்னுடைய நன்றி என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full