2 குழந்தைக்கு தாயான பிரபல நடிகை இரண்டாவது திருமணம் ! புகைப்படம் உள்ளே

By Ajju · 5/2/2018
நடிகை திவ்யா உன்னி கேரளாவை சேர்ந்தவர். சிறு வயதில் இருந்தே பரதநாட்டியம் மற்றும் மோஹிணிஆட்டம் ஆகிய பாரம்பரிய கலைகளில் கை தேர்ந்தவராக இருந்துள்ளார். தமிழில் கடந்த 2000த்தில் வெளிவந்த பாளையத்தம்மன் படத்தில் நடித்து அசத்தி இருப்பார் திவ்யா உன்னி. 1987ல் இருந்து படங்களில் நடித்து வரும் திவ்யா பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்தார். 50கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு சுதிர் சேகரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார் திவ்யா. அதன்பின்னர் நடிக்கவில்லை. இந்த தம்பதிக்கு அருண் என்ற மகனும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். மேலும், அமெரிக்காவில் ஹௌஸ்டன் நகரில் ஒரு டான்ஸ் ஸ்கூல் ஆரம்பித்து அதனை நிர்வகித்து வந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2016ஆம் ஆண்டு சுதிர் சேகரனை பிரிய நினைத்து விவகாரத்து கோறினார். இதனால் 2017ஆம் ஆண்டு இவருக்கு விவாகரத்து கிடைத்தது. தற்போது தனது நீண்ட கால நண்பர் மற்றும் சாப்டவேர் இன்ஜினீயர் அருண்குமார் மணிகண்டன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார் திவ்யா.
Tamil Behind Talkies AMP · Quick view
View full