கலைவாணியாக எனக்கு இந்த அனுபவம் - வீர தீர சூரன் 2 பற்றி நெகிழ்ச்சியில் நடிகை துஷாரா போட்ட பதிவு
வீர தீர சூரன் 2 படம் தொடர்பாக துஷாரா விஜயன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்ரம். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வீர தீர சூரன் 2. இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்கி இருக்கிறார். இந்த படம் HR Pictures தயாரிப்பில் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து, எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். மேலும், இந்த படம் நேற்று காலை 9 மணி சிறப்பு காட்சியை அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், நிதி பிரச்சனையின் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ்க்கு திடீரென்று தடை விதிக்கப்பட்டது. பின் அந்த பிரச்சனையை ஒரு வழியாக முடித்து நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு தான் வீர தீர சூரன் 2 படம் வெளியிடப்பட்டது. லேட்டாக படம் ரிலீஸ் ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
வீர தீர சூரன் 2:
முதல் நாள் இரண்டு ஷோ மட்டும் தான் வீர தீர சூரன் 2 படம் திரையிடப்பட்டது. இருந்தாலுமே ஹவுஸ்புல் காட்சிகளாகத்தான் இருந்தது. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டுமே இரண்டு கோடியே 4 லட்சத்து 18 ஆயிரம் வசூல் செய்து இருக்கிறது. தற்போது படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இனி வரும் நாள்களில் மிக பெரிய வசூல் சாதனை வீர தீர சூரன் 2 செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்தில் கலைவாணி என்ற கதாபாத்திரத்தில் விக்ரமின் மனைவியாக நடித்து அசத்தி இருப்பவர் துஷாரா விஜயன்.
துஷாரா விஜயன் பதிவு:
இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் துஷாரா விஜயன் போட்டிருக்கும் பதிவில், இந்த படம் தொடங்கிய முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை கலைவாணியாக பயணித்த இந்த அனுபவம் என்றுமே என் மனதில் நீங்காமல் இணைந்து இருக்கிறது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தந்த இயக்குனர், தயாரிப்பாளர் இருவருக்குமே என்னுடைய நன்றிகள். விக்ரம் சாரினுடைய அர்ப்பணிப்பும், எனர்ஜியும் என்றுமே என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும்.
படம் பற்றி சொன்னது:
எஸ்.ஜே சூர்யா சார் உடைய திறமை மீது என்றுமே எனக்கு மரியாதை இருக்கிறது. ஜி.வி பிரகாஷ் சார் தன்னுடைய சிறப்பு வாய்ந்த இசையால் இந்த படத்திற்கும், என்னுடைய கலைவாணி கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்து மேஜிக் செய்திருக்கிறார். கேமரா, எடிட்டர் என அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். கலைவாணி கதாபாத்திரத்தை அழகாக திரையில் கொண்டு வந்த அனைவருக்குமே என்னுடைய மனமார்ந்த நன்றிகள் என்று கூறி அன்புடன் சியான் விக்ரம் என்று தன் கையில் விக்ரம் கையெழுத்து போட்ட புகைப்படத்தையும் நெகழ்ச்சியுடன் பகிர்ந்து இருக்கிறார்.
படத்தின் கதை:
படத்தில் எஸ். ஜே சூர்யா காவல்துறை அதிகாரியாக இருக்கிறார். இவர் தன்னுடைய பழைய பகையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ரவி மற்றும் கண்ணன் ஆகிய இருவரையுமே என்கவுண்டர் செய்ய திட்டம் போடுகிறார். பெரிய தாதாவாக ரவி இருக்கிறார். இவருடைய மகன் தான் கண்ணன். ரவி தன் மகன் கண்ணனை இவரை எப்படியாவது எஸ்.ஜே சூர்யாவிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று விக்ரமிடம் உதவி கேட்கிறார். விக்ரமை வைத்து எஸ்.ஜே சூர்யாவை கொன்று விட்டால் தன்னுடைய மகனை காப்பாற்றி விடலாம் என்று தாதா ரவி நினைக்கிறார். விக்ரமும் இது தெரியாமல் ஒத்துக்கொள்கிறார். அதற்குப்பின் என்ன நடந்தது? விக்ரம் எதற்காக தாதா ரவி சொன்னதற்கு ஒத்துக்கொண்டார்? எஸ்.ஜே சூர்யா ஏன் ரவி மற்றும் கண்ணனை கொல்ல நினைக்கிறார்? இவர்களுடைய பின்னணி என்ன? என்பது தான் படத்தினுடைய மீதிக்கதை.