திடீரென்று சினிமா உலகை விட்டு விலக போவதாக அறிவித்த துஷாரா விஜயன்- அவரே சொன்ன காரணம் இது தான்

By subhashini · 10/7/2024

சினிமாவிலிருந்து விலகுவதாக நடிகை துஷாரா விஜயன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக துஷாரா விஜயன் வலம் வந்து கொண்டு இருக்கிறார். தற்போது இவர் தனுஷ் நடித்து இருக்கும் ‘ராயன்’ படத்தில் நடித்து இருக்கிறார். இது தனுஷின் 50வது படம் ஆகும். இந்த படத்தை தனுஷே இயக்கி நடித்து இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

இந்த படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனால் சமீபத்தில் தான் தனுஷின் ‘ராயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது விழாவில் துஷாரா விஜயன் தனுஷ் குறித்தும், ராயன் படம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

துஷாரா விஜயன் பேட்டி:

இதனை அடுத்து படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் துஷாரா விஜயன் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் 'ராயன்' படம் தொடர்பாக துஷாரா விஜயன் அளித்த பேட்டியில், இது என்னுடைய வாழ்க்கையில் சாதனையாக நினைக்கிறேன். இந்த உணர்வை என்னால் வார்த்தைகளால் சொல்லவே முடியவில்லை. நான் தனுஷ் உடைய மிகப்பெரிய ரசிகை. அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. இதை நான் 'பாட்ஷா' படத்தினுடைய இடைவேளை காட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

தனுஷ் குறித்து சொன்னது:

என்னுடைய திரை வாழ்க்கையில் இது ஒரு முக்கிய படமாக இருக்கும். தனுசை பொறுத்தவரை அவர் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். அது அதிகமாகவோ, குறைவாகவோ இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார். நான் இதுவரை பணியாற்றியதிலேயே ரொம்ப வித்தியாசமான இயக்குனர் தனுஷ் தான். அவர் ஆக்சன் என்று மைக்கில் சொன்ன அடுத்த நொடியே கேமராவுக்கு முன்னால் வந்து நின்று நடிப்பார். அது ரொம்ப ஆச்சரியமாக இருக்கும்.

சினிமா பயணம் குறித்து சொன்னது:

அந்த நொடியில் படத்தின் கதாபாத்திரமாகவே அவர் மாறிவிடுவார். இது எனக்கு ரொம்ப இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும். மேலும், எனக்கு இப்போது 26 வயது. என்னுடைய 35 வயதில் நடிப்பில் இருந்தே விலகி விடுவேன். அதற்கு பின் நான் உலகம் முழுவதும் பயணம் செல்ல விரும்புகிறேன். அதற்காக நான் 35 வயதுக்கு மேல் நடிக்க மாட்டேனா என்றால் அப்படி கிடையாது. இந்த உலகத்தில் நான் பயணிக்காத நாடே இல்லை என்பதை சொல்லும் அளவுக்கு எல்லா நாடுகளுக்கும் பயணம் செய்வதில் அதிக கவனம் செலுத்துவேன் என்று கூறியிருக்கிறார்.

துஷாரா விஜயன் திரைப்பயணம்:

மேலும், துஷாரா விஜயன் அவர்கள் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘சர்பட்டா பரம்பரை' படத்தில் ‘மாரியம்மா’வாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இதற்கு முன் இவர் ஆரம்பத்தில் மாடலிங் செய்து கொண்டிருந்தார். அதோடு இவர் ஒரு சிறந்த நடனக் கலைஞரும் ஆவார். மேலும், 2019 ஆம் ஆண்டு தான் தமிழ் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல குறும்படங்களில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து இவர் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் ரஜினியின் வேட்டையன், வீர தீர சூரன் போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full