போதையில செஞ்ச தவற பத்தி கேக்காதீங்க - மது பழக்கத்தை நிறுத்திவிட்டதாக புலம்பி தள்ளிய Gv பிரகாஷ் பட நாயகி.

By Ajju · 12/4/2022

மது குடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன் என்று பிரபல மலையாள நடிகை அளித்து உள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மலையாள மொழியில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்பவர் காயத்ரி சுரேஷ். இவர் திருச்சூர் கேரளாவை சேர்ந்தவர். இவர் முதலில் ஆங்கரிங் செய்து கொண்டிருந்தார். அதற்கு பின் மாடலிங்கில் இறங்கினார். இதன் பிரபலத்தின் மூலம் தான் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இதற்கெல்லாம் முன்பு இவர் சென்னையில் உள்ள RBS பேங்கில் வேலை செய்து கொண்டிருந்தார்.

மேலும், இவர் 2015ஆம் ஆண்டு வெளிவந்த Jamna Pyari என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் சகாவு, நாம் சில்ட்ரன்ஸ், ஒரே முகம், ஒரு மெக்சிகன் அபரதா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து 4ஜி என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் மூலம் தான் காயத்ரி சுரேஷ் தமிழில் அறிமுகமாகிறார்.

சோசியல் மீடியாவில் காயத்ரி சுரேஷ்:

இப்படி இவர் சினிமாவில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் ஏதாவது ஒரு கருத்தை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வார். அதுமட்டுமில்லாமல் கடந்த ஆண்டு மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து குறித்து சோசியல் மீடியாவில் காயத்ரி சுரேஷ் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இவர் பார்ட்டி கொண்டாட தன்னுடைய தோழி வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் தோழிகள் அனைவரும் காரில் வெளியே சென்றனர்.

நடிகை காயத்ரி சுரேஷ் ஏற்படுத்திய விபத்து:

அப்போது அவர்கள் சென்ற கார் எதிரே வந்த வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதனால் பயந்து போன நடிகை காயத்ரி சுரேஷ் மற்றும் அவள் தோழிகள் காரை நிறுத்தாமல் ஓட்டம் பிடித்தனர். அவர்களை விரட்டி சென்ற பொதுமக்கள் காரை மடக்கினர். பிறகு பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், நடிகை காயத்ரி சுரேஷ் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதனால் காயத்ரி சுரேஷ் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டதாக ரசிகர்கள் கூறினார்கள்.

நடிகை காயத்ரி சுரேஷ் அளித்துள்ள பேட்டி:

இதனால் காயத்ரி சுரேஷ் மீது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை எழுந்து இருந்தது. இந்நிலையில் தான் மது பழக்கத்தை விட்டு விட்டதாக நடிகை காயத்ரி சுரேஷ் அளித்துள்ள பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. அது என்னவென்றால், ஒரு காலத்தில் மது குடிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. மது போதையில் செய்த தவறுகளை மட்டும் கேட்காதீர்கள். அதை இப்போது சொல்வதும் சரி இல்ல. சுயநினைவுடன் அவற்றை செய்யவில்லை.

வைரலாகும் காயத்ரி சுரேஷ் பேட்டி :

பின்னர் வாழ்க்கை, தொழில், உடல் தோற்றம், ஆரோக்கியம் உள்ளிட்ட சில விஷயங்களை மனதில் வைத்து மது பழக்கத்தை நிறுத்தி விட்டேன். அதேபோல் என்னுடன் மஹே படத்தில் இணைந்து நடித்த அனீஷ் மேனன் மீது இளம்பெண் பாலியல் புகார் தெரிவித்து இருப்பது பற்றி கேள்விப்பட்டேன். ஆனால், கேள்விப்படும் விஷயங்கள் அனைத்தும் உண்மை என்று சொல்லிவிட முடியாது என்று கூறியிருந்தார். இப்படி இவர் அளித்து இருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full