ஆம்பளைங்க மட்டும் இருப்பாங்க அப்படியே உடை மாற்ற சொல்லுவாங்க- சினிமாவின் நிலை குறித்து காயத்ரி சொன்ன பதில்

By subhashini · 27/7/2023

சினிமாவில் இதை தான் மாற்ற வேண்டும் என்று நடிகை காயத்திரி அளித்து இருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் காயத்ரி. இவர் 2012 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த 18 வயசு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தின் மூலம் தான்.

இந்த படத்தின் மூலம் காயத்ரி வேற லெவல் பிரபலமாகிவிட்டார் என்று சொல்லலாம். அதனை தொடர்ந்து இவர் பொன்மாலைப் பொழுது, ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதோடு இவர் அதிகம் விஜய் சேதுபதி உடன் தான் சேர்ந்து நடித்திருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த படம் மாமனிதன்.

காயத்ரி திரைப்பயணம்:

இந்த படத்தில் காயத்ரி அவர்கள் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக குடும்ப தலைவியாக நடித்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் இவருடைய நடிப்பு பாராட்டைப் பெற்றிருந்தது. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனை அடுத்து இவர் லோகேஷ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியாகியிருந்த விக்ரம் படத்தில் பகத் பாசனின் காதலியாக நடித்திருந்தார். இந்த படம் இந்திய அளவில் கொண்டாடப்பட்டிருந்தது.

காயத்ரி அளித்த பேட்டி:

மேலும், விக்ரம் படம் விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை அடுத்து காயத்ரி அவர்கள் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் சினிமாவில் பெண்களின் நிலை குறித்து நடிகை காயத்ரி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், பொதுவாகவே சினிமா உலகில் நிறைய பேர் வந்து செல்வார்கள். அதில் சிலர் மட்டும்தான் நமக்கு நண்பர்களாக இருப்பார்கள்.

படப்பிடிப்பில் பெண்கள் நிலைமை:

எனக்கு மணிரத்தினம் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாகவே ஆசை.
அதேபோல் ஒரு படப்பிடிப்பிற்கு சென்றால் அங்கு என்னை சுற்றி நிறைய ஆண்கள் இருப்பார்கள். அங்கு நான் மட்டும் தான் ஒரு பெண்ணாக இருப்பேன். ஒரு பெண்ணுக்கு அவசரமான நிலையில் ஒரு பாத்ரூம் வேண்டும் என்பதை கூட அவர்கள் எளிதாக உணர மாட்டார்கள். அதை ஏற்பாடு செய்து கொள்ளவும் தாமதம் செய்வார்கள். அது மட்டுமில்லாமல் உடை மாற்றுவதற்கு போன்ற அத்தியாவசிய தேவைகள் ஒரு பெண்ணிற்கு தேவை என்றும் அவர்கள் நினைக்க மாட்டார்கள்.

சினிமாவின் நிலைமை:

ஒரு சில சமயங்களில் வேறு ஒரு இடத்திற்கு காரில் செல்லும்போது சிறிய சாட் எடுக்க வேண்டும் என்பதால் காரிலேயே உடைமாற்றிக் கொள்ள முடியுமா? என்று கேட்பார்கள். இதெல்லாம் ரொம்ப கஷ்டமாக இருக்கும். இந்த நிலைமை சினிமாவில் மாற வேண்டும். பெண்களுக்கு என்ன அத்தியாவசிய தேவை என்பதை ஆண்கள் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செய்து தந்தால் நன்றாக இருக்கும் என்று கூறி இருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full