உங்களுக்கு அசிங்கமா இல்லையா? பத்திரிகையாளரை வெளுத்து வாங்கிய கௌரி கிஷன் - நடந்தது என்ன?
தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் கௌரி கிஷன்.
96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதுமட்டுமில்லாமல் இவர் ஆரம்பத்தில் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். தற்போது இவர் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். 96 படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கதாநாயகி, துணை நடிகை என்று கௌரி பட்டைய கிளப்பு இருந்தார்.
இந்த ஒரு படத்திலேயே இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் என்று சொல்லலாம். அதனை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதை அடுத்து இவர் 96-2, LIK என படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். தற்போது இவருடைய நடிப்பில் தமிழில் உருவாகி இருக்கும் படம் அதர்ஸ். இந்த படத்தில் புதுமுக நடிகர் ஆதித்யா மாதவன் தான் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
அதர்ஸ் படம்:
இவருக்கு ஜோடியாக தான் கௌரி கிஷன் நடித்திருக்கிறார். இந்த படத்தை கிராண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தை அபின் ஹரிஹரன் இயக்கியிருக்கிறார். மெடிக்கல் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படம் நவம்பர் 7ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது.
தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடந்து இருக்கிறது. இதில் படக்குழுவினருடன் நடிகை கௌரி கிஷன் கலந்து கொண்டிருந்தார்.
கௌரி கிஷன் பேட்டி:
அப்போது செய்தியாளர் ஹீரோவிடம், கௌரி கிஷனை தூக்கிறீர்களே, அவருடைய வெயிட் எவ்வளவு இருந்தது? என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள். இதை கேட்டு கோபப்பட்ட கௌரி கிஷன், என்னுடைய உடல் எடையை தெரிந்து வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? ஒருவரை உடல் ரீதியாக அவமானப்படுத்துவதெல்லாம் கேள்வியா? நான் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அதை குறித்து கேளுங்கள் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்.
உடனே அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர், நீங்கள் கொஞ்சம் வெயிட் ஆக இருந்தீர்கள். அதனால் தான் கேட்டேன். தமிழ் சினிமாவில் இப்படித்தான் கேள்விகள் இருக்கும்.
https://www.youtube.com/watch?v=I1EB-Di2ljM
வாக்குவாதத்தில் நடிகை:
உங்களிடம் மோடியை பற்றி கேட்க முடியும்? குஷ்பு, சரிதா எல்லோருமே இந்த கேள்வியை எதிர்கொண்டவர்கள் தான் என்று திமிராக பதில் அளித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கௌரி கிஷன், இங்க நான் மட்டுமே தான் பெண். இப்படி பாடி ஷேமிங் செய்வது, அவமானப்படுத்துவதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு நடிகையினுடைய உடல் எடையை தெரிந்து கொள்வது அநாகரிகமானது. இதெல்லாம் ஒரு கேள்வியா? என்னைப் பற்றி stupid தனமாக கேட்ட கேள்விக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் கேட்டிருக்கிறார். இதனால் பத்திரிகையாளருக்கும் கௌரி கிஷனுக்கும் இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது.