நானும் சிம்புவும் மீண்டும் இணைந்து விட்டோம்.! ரசிகர்களுக்கு ட்விட்டரில் ஷாக் கொடுத்த ஹன்சிகா.!

By Rajkumar · 6/3/2019

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் சிம்பு, நயன்தாரா, ஹன்சிகா என்று தனது சித்து விளையாட்டை அனைவருக்கும் தெரியும். ஆனால், இரண்டு காதலுமே பிரேக்  அப் ஆகிவிட்டது. நயன்தாராவுடன் காதல் முறிந்த பிறகும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்திருந்தார். 

தற்போது இரண்டாவது காதலியான ஹன்சிகா படத்திலும் நடிக்கப்போகிறார் சிம்பு. ‘மெளனராகம்’ படத்தில் ரேவதியுடன் படம்முழுக்க மோகன் நடித்திருப்பார். ஃப்ளாஷ்பேக்கில் கொஞ்ச நேரம் மட்டுமே தோன்றும் கார்த்திக் வேடம், பெரிதாகப் பேசப்பட்டுவருகிறது.

‘மஹா’ படத்திலும் கார்த்திக் பண்ணியதைப்போல மிரட்டலான கேரக்டரில் சிம்பு நடிக்க இருப்பதை ரகசியமாக வைத்துள்ளனர். ஶ்ரீகாந்த், ஹன்சிகா ஜோடியாக நடித்துவரும் இந்தப் படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து மிரட்ட இருக்கிறார்.

https://twitter.com/ihansika/status/1103150652845223938

சிம்பு, ‘மஹா’ படத்துக்காக மொத்தம் 10 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். `ஷோயப்’ எனும் முஸ்லிம் இளைஞர் வேடத்தில் அவர் நடிக்கிறார். தற்போது இதனை உறுதி செய்யும் விதமாக ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுவும் இரண்டு கைகள் ஒன்றாக இணைந்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full