எங்கள் இதயங்கள் நிறைந்து இருக்கிறது - 2வது குழந்தை பிறந்த சந்தோசத்தை அறிவித்த நடிகை இலியானா
நடிகை இலியானாவிற்கு மீண்டும் இரண்டாவது முறை குழந்தை பிறந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து இருப்பவர் இலியானா. இவர் “இருக்கானா இடுப்பிருக்கானா” என்ற பாடலின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை தன் மூலம் ஈர்த்தார். இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் ஒரு மாடலும் ஆவார். இவர் ‘தேவதாசு’ எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் திரை உலகிற்கு அறிமுகமானார்.
அதன் பின் இவர் ‘கேடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களில் நடித்து வந்தார். அதன் பின் 2012 ஆம் ஆண்டு பர்பி என்ற படத்தின் மூலம் இவர் இந்தி மொழியில் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து ஹிந்தியில் பல படங்களில் நடித்தார். அதிலும், இவர் நடிப்பில் வெளிவந்த பர்பி, ஹாப்பி என்டிங், ருஷ்டம், ரைட் போன்ற படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இலியானா திரைப்பயணம்:
மேலும், இவர் கடைசியாக தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் வெளியாகியிருந்த அமர் அக்பர் அந்தோணி என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அது மட்டும் இல்லாமல் இவருக்கு தென்னிந்தியா மொழியிலும் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இவர் ஹிந்தி மொழி படங்களில் மட்டும் தொடர்ந்து நடித்து இருந்தார்.
இலியானா குடும்பம்:
இதற்கிடையில் நடிகை இலியானா அவர்கள் புகைப்பட கலைஞரை காதலித்தார். அந்த காதல் தோல்வியில் முடிந்தது. அதன் பின் இவர் போதைக்கு அடிமையானார். அதன் பின் தான் இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு மைக்கல் டோலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பு இரண்டு பேரும் லிவிங் லிவிங் டுகெதரில் சேர்ந்து வாழ்ந்ததால் இலியானா கர்ப்பமானார்.
இலியனா இரண்டாவது குழந்தை:
பின் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவருக்கு மகன் பிறந்தான். அவருக்கு கோவா பீனிக்ஸ் டோலன் என்று பெயரிட வைக்கப்பட்டிருக்கிறது. இதை அடுத்து கடந்த ஆண்டு நடிகை இலியானா மீண்டும் இரண்டாம் முறை கர்ப்பமாக இருக்கும் செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில் மீண்டும் இரண்டாவது முறை நடிகை இலியானாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது.
இலியனா பதிவு:
தன்னுடைய இரண்டாவது மகனுக்கு கீனு ரஃபே டோலன் என்று பெயர் வைத்திருக்கிறார். மேலும் தன்னுடைய மகனுடன் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்த இலியானா, எங்கள் இதயங்கள் நிறைந்திருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.