'சூர்யா 45' பட ஷூட்டிங்கில் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம் - அவரே சொன்ன தகவல், என்ன தெரியுமா?
சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பில் பிரபல நடிகைக்கு ஏற்பட்டு விபரீதம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த படம் ‘கங்குவா’. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.
இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து இருந்தார்கள். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். இந்த படம் முழுக்க முழுக்க 3Dயில் உருவாக்கப்பட்டு இருந்தது. மேலும், வரலாற்று பின்னணியை மையமாக வைத்து இந்த படத்தை வித்தியாசமான பாணியில் இயக்குனர் உருவாக்கி இருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
கங்குவா படம் :
இதை அடுத்து சூர்யா அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி இருக்கிறார். அதில் ஒன்று தான் ரெட்ரோ. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் ஹீரோயினியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தான் தயாரிக்கிறது. மே மாதம் இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். அதற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை அடுத்து தற்போது ஆர்.ஜே பாலாஜி இயக்கும் 'சூர்யா 45' படத்தில் சூர்யா நடிக்கிறார்.
சூர்யா 45 படம்:
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இதற்கு முன்பு மௌனம் பேசியதே, ஆறு போன்ற படங்களில் சூர்யா-த்ரிஷா இருவரும் சேர்ந்து நடித்திருந்தார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக ஆர்.ஜே பாலாஜி நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு முதலில் ஏ.ஆர் ரகுமான் தான் இசையமைப்பதாக இருந்தது. பின் சில காரணங்களால் அவர் விலகிவிட்டார்.
படம் குறித்த தகவல்:
தற்போது சாய் அபயங்கர் இந்த படத்தில் இசையமைப்பாளராக இருக்கிறார். இந்த படத்தில் சுவாசிகா, ஷிவிதா, யோகி பாபு, நட்டி சுப்பிரமணியம், மலையாள நடிகை இந்திரன்ஸ், மன்சூர் அலிகான் உட்பட பலர் நடிக்கிறார்கள். மேலும், இந்த படத்திற்கு பேட்டைக்காரன் என்று பெயர் வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவை, பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்றது. இதை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக சென்னையில் நடைபெற்றது. தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
நடிகைக்கு ஏற்பட்ட விபத்து:
இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுவாசிகாவிற்கு அடிபட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தற்போது இந்த படத்தினுடைய சண்டைக் காட்சிதான் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக படபிடிப்பின் போது நடிகை சுவாசிகாவின் இடது கையில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. காயம் முழுவதும் சரியான பின்னர் இவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுவாசிகா பதிவு போட்டு இருக்கிறார்.