அட, இளசுகளின் லேட்டஸ்ட் கிரஸ். தென்றல் சீரியலில் நடித்துள்ளாரா. யாருனு தெரியுதா?

By Rajkumar · 6/7/2020

தமிழ் சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகை நடிகர்கள் ஆரம்பத்தில் சினிமாவில் ஒரு சிறு பிரேம்களில் தோன்றியவர்கள் தான். அவ்வளவு ஏன் இன்று தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளாக திகழ்ந்து வரும் திரிஷா, சமந்தா என்று பல நடிகைகள் ஆரம்ப காலத்தில் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் தான். அந்த வகையில் இளசுகளின் லேட்டஸ்ட் கிரஷஷாக திகழ்ந்து வரும் இவரும் ஒருவர் தான்.

அட, வேறு யாரும் இல்லைங்க இவர் நடிகை ஐஸ்வர்யா மேனன் தான். 1995 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவர் ஈரோட்டில் வளர்ந்தார். சென்னையில் உள்ள எஸ் ஆர் எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானது 2013 ஆம் ஆண்டு வெளியான ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படம் மூலம் தான்.

இதையும் பாருங்க : மீண்டும் புடவையில் கிளாமர் போட்டோ ஷூட் - நெட்டிசன்களை கவர்ந்த Vj மகேஸ்வரி.

ஆனால், அந்த படத்திற்கு முன்பே சித்தார்த் நடிப்பில் வெளியான "தீயா வேலை செய்யணும் குமாரு" என்ற படத்தில் ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஹன்ஷிகாவின் தோழியாக நடித்துள்ளார்.அதே போல காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சில காட்சிகளில் தோன்றியுள்ளார்.

https://www.youtube.com/watch?v=ahBiwufetlw

ஆனால், இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் நடித்துள்ளார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. ஆம், இந்த சீரியலில் நடிகை ஐஸ்வர்யா மேனன், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தென்றல் சீரியலில் இவர் நடித்த காட்சியின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full