தாலி கட்டும் போது ரோஷன் அழுதுட்டான், ஆனால் - நடிகை ஜனனி ஐயர் ஓபன் டாக்

By subhashini · 14/4/2026

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜனனி ஐயர். இவர் கர்நாடகாவில் பெங்களூரில் பிறந்தவர். இவர் முதன் முதலில் மாடலிங் தான் செய்தார். அதன் பின் இவர் பல விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார். அதன் பின் இவர் தமிழில் 2009ஆம் ஆண்டு நந்தினி ஜேஎஸ் இயக்கத்தில் வெளிவந்த திரு திரு துரு துரு என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். பின் 2010ஆம் ஆண்டு வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் ஜனனி நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் 2011ஆம் ஆண்டு விஷால், ஆர்யா நடிப்பில் பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில்கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் பின்னர் இவர் பல படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். மேலும், 2018 ஆம் ஆண்டு நடந்த பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்கு போட்டியாளராக ஜனனி கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஜனனி மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் ஜனனி நான்காம் இடத்தைப் பிடித்தார்.

ஜனனி ஐயர் திருமணம்:

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து வந்தார். இப்படி இவர் வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் பெரிய நடிகையாக திரையில் தக்க வைக்க போராடி வருகிறார். அதோடு இவருக்கு சரியாக பட வாய்ப்புகள் அமையவில்லை. சமீப காலமாகவே ஜனனி ஐயரின் படங்கள் எதுவும் சினிமாவிலும் வராமல் இருந்தது. இருந்தாலுமே இவர் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது.

ஜனனி ஐயர் பேட்டி:

இவர் திருமணம் செய்து கொண்ட நபரின் பெயர் சாய் ரோஷன் ஷயாம். இவர் ஒரு விமானி. நிச்சயதார்தத்தை போலவே ஜனனி அயர் தன்னுடைய திருமணத்தையும் எளிமையாக நடத்தியிருந்தார். இந்த திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டிருந்தார்கள். இவருடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் திருமணத்திற்கு பிறகு அளித்த பேட்டியில் ஜனனி ஐயர், என் கணவர் ரோஷனுடன் நான் கொண்டாடும் முதல் தமிழ் புத்தாண்டு. ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.

கணவர் பற்றி சொன்னது:

ஒவ்வொரு ஆண்டுமே இருவரின் உடைய பாரம்பரியத்தையும் நாங்கள் பின்பற்றுவோம். நாங்கள் கணவன் மனைவி என்பது எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு அவர் எப்போதுமே சிறந்த நண்பர்தான். திருமணம் ஆன ஆரம்பத்தில் வரும் பொறுப்புகளை நாங்கள் ரசித்து வருகிறோம். திருமணத்தன்று தாலி கட்டும் நேரத்தில் ரோஷன் கண்கலங்கிவிட்டார். அவர் அழுதால் நானும்அழ தொடங்கி விடுவேன். அதனால் நான் அவரை அழ வேண்டாம் என்று சொன்னேன் என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full