சத்தம் இல்லாமல் நடந்த முடிந்த பிக் பாஸ் ஜனனி ஐயரின் திருமணம், மாப்பிள்ளை யார் தெரியுமா?
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜனனி ஐயர். இவர் கர்நாடகாவில் பெங்களூரில் பிறந்தவர். இவர் முதன் முதலில் மாடலிங் தான் செய்தார். அதன் பின் இவர் பல விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார். அதன் பின் இவர் தமிழில் 2009ஆம் ஆண்டு நந்தினி ஜேஎஸ் இயக்கத்தில் வெளிவந்த திரு திரு துரு துரு என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
பின் 2010ஆம் ஆண்டு வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் ஜனனி நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் 2011ஆம் ஆண்டு விஷால், ஆர்யா நடிப்பில் பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில்கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் பின்னர் இவர் பல படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
ஜனனி அயர் குறித்த தகவல்:
மேலும், 2018 ஆம் ஆண்டு நடந்த பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்கு போட்டியாளராக ஜனனி கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஜனனி மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் ஜனனி நான்காம் இடத்தைப் பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து வந்தார். இப்படி இவர் வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் பெரிய நடிகையாக திரையில் தக்க வைக்க போராடி வருகிறார்.
ஜனனி அயர் நிச்சயதார்த்தம்:
அதோடு இவருக்கு சரியாக பட வாய்ப்புகள் அமையவில்லை. சமீப காலமாகவே ஜனனி ஐயரின் படங்கள் எதுவும் சினிமாவிலும் வராமல் இருந்தது. இருந்தாலுமே இவர் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது. இது தொடர்பாக ஜனனி ஐயர் சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார். இவர் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நபரின் பெயர் சாய் ரோஷன் ஷயாம். இவர் ஒரு விமானி.
ஜனனி அயர் திருமணம்:
இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய நிச்சயதார்தத்தை போலவே ஜனனி அயர் தன்னுடைய திருமணத்தையும் இன்று எளிமையாக நடத்தியிருக்கிறார். இந்த திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது இவருடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்