கோபிநாத்தை சொல்லி எந்த ப்ரோஜனும் இல்லை - 'நீயா நானா' நிகழ்ச்சியை வெளுத்து வாங்கிய யூடியூப் பிரபலம் ஜனனி

By subhashini · 4/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சியில் ‘நீயா நானா’ ஒன்று. இந்த நிகழ்ச்சியை பல வருடமாக கோபிநாத் தான் தொகுத்து வழங்கி வருகிறார். ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நிகழ்ச்சி தான் ‘நீயா நானா’. இந்த நிகழ்ச்சி என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியில் தெருநாய்கள் நகரத்தில் வசிக்க கூடாது, தெருநாய்களுக்கும் நகரத்தில் வசிக்க உரிமை இருக்கிறது என்று இரு தரப்பில் விவாதம் நடைபெற்றது.

அதாவது, கடந்த சில வாரங்களாகவே தெரு நாய் பிரச்சனை தான் விவாதமாக போய்க்கொண்டிருக்கிறது. பிரபலங்கள் சிலர் இதற்கு ஆதரவு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த டாபிக் சர்ச்சையாகி இருப்பதால் நீயா நானா நிகழ்ச்சியிலும் இதை வைத்து விவாதம் செய்து இருக்கிறார்கள்.
ஒருபுறம் விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் தெரு நாய்கள் மனிதர்களுக்கு எந்த தீங்கும் இழைப்பதில்லை, என்று வாதிடுகிறார்கள். இன்னொரு பக்கம் தெரு நாய்களால் கடிபட்டு பாதிக்கப்பட்ட மக்கள் உணர்வு பூர்வமாக தங்களுடைய கவலைகளை எடுத்து வைக்கிறார்கள்.

நீயா நானா நிகழ்ச்சி:

இருதரப்பிலுமே காரசாரமாக விவாதம் நடைபெற்றது. மேலும், இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள், youtube பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் என பல தரப்பிலிருந்தும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை பேசியிருந்தார்கள். அந்த வகையில் நடிகை அம்மு ராமச்சந்திரன், படவா கோபி
ஆகியோர் தெரு நாய்களுக்கு ஆதரவாக பேசி இருந்தார்கள். இவர்கள் பேசி இருந்தது மிகப்பெரிய அளவில் சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு இவர்கள் விளக்கம் கொடுத்தும் வீடியோக்களை போட்டு இருந்தார்கள்.

ஜனனி வீடியோ:

அதேபோல் youtube பிரபலம், வெப் சீரிஸ் நடிகை ஜனனியும் தெரு நாய்களுக்கு ஆதரிப்பவர்கள் பக்கத்தில் தான் அமர்ந்திருந்தார். நிகழ்ச்சியில் இவர் பேசவே இல்லை. இதற்காகவே இவரை சோசியல் மீடியாவில் பயங்கரமாக கலாய்த்து இருந்தார்கள். இந்நிலையில் தொடர்பாக ஜனனி வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், இந்த நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன். சும்மாவே இருந்தேன், பேசவே இல்லை என்றெல்லாம் மீம்ஸ் போட்டு இருந்தீங்க. சோ ஆரம்பித்து பத்து நிமிடத்திலேயே என்ன நடக்கிறது என்று எங்களுக்கு தெரிந்து விட்டது.

நிகழ்ச்சி பற்றி சொன்னது:

இது முழுக்க முழுக்க டிஆர்பிக்காக ஸ்கிரிப்ட் ஆக எடுத்த நிகழ்ச்சி. இதில் நான் மட்டும் பேசி என்ன ஆகப்போகிறது. எட்டு மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியை 48 நிமிடங்கள் எடிட் செய்து போட்டிருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் நாங்கள் கொடுத்த முக்கியமான தகவல்கள் கூட அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதில் கோபிநாத்தை சொல்லி எந்த தவறும் இல்லை. அவரை டாக் பேக் கேட்டு தான் பேசிக் கொண்டிருந்தார். தெரு நாய்களுக்கு எதிராக பேசிய அவர்களுடைய கருத்துக்களை மட்டுமே தெளிவாக காட்டி இருந்தார்கள் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full