இதற்கெல்லாம் விஜய் வாய் திறக்க மாட்டார், சிபிஐ குடுமியை பிடித்துடுவாங்க - பிக் பாஸ் ஜூலி வீடியோ
தமிழ் சினிமா உலகில் மாஸ் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். தற்போது இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் களமிறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியை ஆரம்பித்து மும்முரமாக செயல்பட்டு வருகிறார். அதோடு விஜய் அவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் தன்னுடைய கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து விஜய் அவர்கள் உரையாடி இருந்தார். அதில் விஜய் அவர்கள் ஜல்லிக்கட்டு காளை பற்றி ஒரு குட்டி கதை சொல்லியிருந்தார்.
இதற்கு பிக் பாஸ் ஜூலி, உங்கள் கட்சியில் பாதி பேர் மைனர்கள். ஜல்லிக்கட்டு காளைக்கு புல்லு கட்டு காட்ட போயிட்டு உயிரிழப்புகள் அதிகரிச்சா என்ன செய்வீங்க? என்று கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை போட்டிருந்தார். இது மிகப்பெரிய அளவில் அதிர்வலை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் ரசிகர்கள் பலரும் ஜூலியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் பிரபலங்கள் பலரும் ஜூலியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுகிறார்கள். பின் இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ஜூலி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இருந்தும் பலர் ஜூலியை திட்டியும் ட்ரோல் செய்தும் வருகிறார்கள்.
விஜய் சர்ச்சை:
மேலும், சென்னையில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி, இப்போது நிறைய திரைத்துறை தளபதிகள் அரசியலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். வாக்குகளை பிரித்து எப்படியாவது மாநிலத்தை கைப்பற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள். இதை டெல்லி உட்பட மற்ற மாநிலங்களிலும் செய்திருக்கலாம். ஆனால், இங்கே முடியாது. தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாகவும் சிம்ம சொப்பனமாகவும் முதல்வர் மு க ஸ்டாலின் இருக்கிறார். என்னை பொருத்தவரை தளபதி என்றால் மு க ஸ்டாலின் மட்டும்தான். தமிழ்நாடு ஒரு வலுவான திராவிட கோட்டை. எந்த ஒரு ஸ்டார், கடப்பாரையைக் கொண்டும் இந்த கோட்டையை அசைக்க முடியாது என்று பேசி இருந்தார்.
https://www.youtube.com/watch?v=r1BoEMKVVNs
ஜூலி வீடியோ:
இப்படி இருக்கும் நிலையில் தற்போது ஜூலி வெளியிட்ட வீடியோவில், எல்லோரும் எல்பிஜி சிலிண்டரை வாங்கி வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். வழக்கம் போல மோடி நம் வயிற்றில் அடிக்காமல் இருந்தால் சந்தோஷம். ஆனால், இதைப்பற்றியெல்லாம் விஜய் பேச மாட்டார். காரணம், பேசினால் ஜி சொல்லி சிபிஐ வந்து விஜய் குடிமியை பிடித்து ஆட்டிவிடுவார்கள். இதனால் தான் விஜய் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இப்போது வரைக்குமே விஜய் பாஜகவுடன் சேருவாரா? இல்லையா? என்ற பேச்சுகள் நடந்து கொண்டிருக்கிறது.
சட்டம் தன் கடமையை செய்யும்🔥 A டீம் B டீம் யார் வந்தாலும் நம்மளை அசைக்க முடியாது 😎#lpg #julie #dmk #tvk #iran pic.twitter.com/aU9Id1pqSo
— Mariajuliana_official (@iMariaJuliana) March 17, 2026
விஜய் பற்றிய விமர்சனம்:
நானே சொல்கிறேன், அவர்கள் பாஜகவுடன் சேர மாட்டார்கள். காரணம், தமிழகம் பாஜகவை எதிர்க்கிறது. பாஜகவிற்கு எதிரானவர்கள் என்று தங்களை காட்டிக் கொள்ளத்தான் விஜய் இப்படி செய்கிறார். அப்படி செய்தால் தான் ஓட்டுக்களையும் அவர் வாங்க முடியும். இதை நம்பி மக்கள் யாரும் ஏமாந்து விடாதீர்கள். மறக்காமல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். நம்முடைய பேஸ்கட்பால் அண்ணா 40 நிமிட விசாரணை மதுபாட்டுலால் மாட்டிக் கொண்டார் என்று சொல்கிறார்கள். கட்சிக்கு இதெல்லாம் அசிங்கம் இல்லையா? சட்டம் தன் கடமையை செய்யும். பாஜக தான் தவெக, தவெக தான் பாஜக. விஜய் பாஜகவின் பி டீம் இல்லை, ஏ டிஎமே அவர்தான் என்று கூறி இருக்கிறார்.