சினிமாவை ஒரு படி முன்னேற வைக்கும் படைப்பு தான் தாய் கிழவி - நெகிழ்ச்சியில் நடிகை ஜோதிகா பதிவு

By subhashini · 26/2/2026

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராதிகா சரத்குமார். இவர் 80, 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமான கதாநாயகியாக திகழ்ந்து கொண்டிருந்தார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தாய் கிழவி. இந்த படத்தை இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பால சரவணன், சிங்கம் புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தான் தயாரித்திருக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தை பாராட்டி நடிகை ஜோதிகா போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஜோதிகா, பெண்மையுடைய வலிமையை இவ்வளவு அழகாக திரையில் காண்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மனதிற்கு இதமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இது ஒரு முக்கியமான முற்போக்கான ஒரு படம். இயக்குனர் சிவகுமார் முருகேசன் அவர்களுக்கு இது உண்மையிலேயே முதல் படமா? சமூகத்திற்கு எவ்வளவு ஒரு முக்கியமான கருத்தை சொல்லி இருக்கிறீர்கள்.

தாய் கிழவி:

குறிப்பாக நகைச்சுவையோடு சொல்லியிருப்பது ஒரு தனி சிறப்பு. ஒரு பெண்ணாக உங்கள் கதையை பார்க்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது. உங்கள் சிந்தனை ஓட்டம் உங்கள் நற்பணியை பிரதிபலிக்கிறது. சிவகார்த்திகேயன் அவர்களுக்கு ராதிகா மேடம் போன்ற ஒரு மகா கலைஞருக்கு அவர் தகுதிக்கேற்ற ஒரு மேடையை அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி. வயது தடையில்லை, ஒரு பெண்ணின் தூய திறமையை மையமாக வைத்து படம் எடுத்ததற்காக ஒட்டுமொத்த நடிகையர் சமூகத்தின் சார்பாகவும் உங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

View this post on Instagram

A post shared by JFW Binge (@jfwbinge)

ஜோதிகா பதிவு:

ஒரு பெண் மைய திரைப்படத்திற்கு துணையாக நின்றதற்கும் என்னுடைய பாராட்டுக்கள்.
ராதிகா சரத்குமார் அவர்களுக்கு உங்களுடைய நடிப்பு என்னை ரொம்பவே வியக்க வைக்கிறது. ரொம்ப ஊக்கமளிக்கிறது. இந்த கதாபாத்திரத்துக்காக நீங்கள் உடல்ரீதியாக எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறீர்கள் என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. தாய்க்கிழவி கதாபாத்திரம் ரொம்பவே வலிமையானது, புத்திசலமானது மட்டுமில்ல கியூட்டான ஒன்றாகவும் இருக்கிறது.

படம் பற்றி சொன்னது:

திரைக்குப் பின்னால் இருக்கும் உங்கள் நிஜ குணாதிசயத்தின் பிரதிபலிப்பு தான் இந்த கதாபாத்திரம்.
உங்கள் உடல் மொழி, ஸ்டைல், வெகுளித்தனம், குரல், சிரிப்பு, வசன உச்சரிப்பு அனைத்திலுமே
அருமையாக இருக்கிறது. எங்களுடைய இதயத்தையும் வென்று விட்டீர்கள். நடிப்பில் உங்களை தனித்து காட்டும் அந்த சிறு சிறு அசைவுகள் அற்புதம். என்னை பொருத்தவரை தாய்க்கிழவி என்பது ஒரு பெண் மைய பொழுதுபோக்கு படம் மட்டுமல்ல இந்த சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய படைப்பு. தாய் கிழவி பட குழுவினர் அனைவரும் பெருமை பட கூடிய தருணம் இது என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full