ஜோதிகாவின் முதல் இன்ஸ்டா பிக் ரகசியம் - வைரலாகும் ஜோதிகாவின் ட்ரெக்கிங் வீடியோ.

By Rajkumar · 8/9/2021

தமிழ் சினிமாவில் 90 கால கட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. இவர் ஹிந்தி படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். பின் இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் , விக்ரம், சூர்யா என்று பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தென்னிந்திய மொழிகளில் கொடி கட்டி பறந்தார். பிறகு ஜோதிகா அவர்கள் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும், 6 வருடங்களுக்கு பின்னர் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

பின்னர் இவர் மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி ஆகிய பல படங்களில் நடித்து மீண்டும் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடதை பிடித்து உள்ளார். கடந்த ஆண்டு நடிகர் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்து வெளிவந்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டும் இல்லாமல் தற்போது ஜோதிகா அவர்கள் பல வருடங்களுக்கு பிறகு முதன் முறையாக இன்ஸ்டாவில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து சூர்யா அவர்களும் கருத்து பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது முதன்முறையாக ஜோதிகா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அது சுதந்திர தினத்தன்று இமயமலையில் 70 கிலோமீட்டர் தூரம் வாக்கிங் சென்றுள்ளார் ஜோதிகா. அந்த வீடியோவை தான் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை நெட்டிசன்களும், ரசிகர்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இதுவரை இந்த வீடியோவை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

https://www.youtube.com/watch?v=UwFm1xv5sUY&feature=youtu.be

தற்போது நடிகை ஜோதிகா அவர்கள் உடன்பிறப்பே என்ற படத்தில் நடித்து உள்ளார். இது இவரின் 50வது படம். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்து உள்ளது. இந்த படத்தில் ஜோதிகா அவர்கள் கிராமத்து பெண் என்ற வேடத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த படம் அக்டோபர் மாதம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

behindtalkies AMP · Quick view
View full