விஜய்யை புகழ்ந்து பேசிய ரசிகர், ஜோதிகா கொடுத்த ரிப்பளை - என்ன சொல்லி இருக்காரு பாருங்க
விஜய்-சூர்யா குறித்து ரசிகரின் பதிவுக்கு நடிகை ஜோதிகா கொடுத்திருக்கும் ரிப்ளை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் இந்தி படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். அதன் பின் தான் இவர் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்தார். பிறகு தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்புகள் வந்தாலும் பல போராட்டங்களுக்கு பிறகு இருவருமே திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா சினிமாவில் இருந்து கொஞ்சம் ப்ரேக் எடுத்துக்கொண்டார். சினிமாவில் இவர் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து இவர் மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பே, தம்பி போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
ஜோதிகா திரைப்பயணம்:
திருமணத்திற்கு பிறகு ஜோதிகா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும், இவர் நடிகை என்பதை தாண்டி தயாரிப்பாளரும் ஆவார். சூர்யா- நடிகை இருவரும் ஒன்றாக இணைந்து 2டி என்டர்டைன்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இதுவரை இவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதோடு சமீப காலமாகவே ஜோதிகா உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஜோதிகா படங்கள்:
மேலும், நீண்ட இடைவெளிக்கு பின் ஜோதிகா பாலிவுட்டிலும் கால் தடம் பதித்திருக்கிறார். அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக இவர் நடித்த சைத்தான் படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி இருந்த ஸ்ரீகாந்த் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து ஜோதிகா தமிழில் லயன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
டப்பா கார்ட்டெல் படம்:
தற்போது இவர் டப்பா கார்ட்டெல் என்ற பாலிவுட் வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். இதில் ஷபானா ஆஸ்மி, அஞ்சலி ஆனந்த் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் நெட்பிளிக்சில் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஜோதிகா மும்முரமாக இருந்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு ஜோதிகா போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
ஜோதிகா பதில்:
அதாவது, சமீபகாலமாகவே சோசியல் மீடியாவில் ஜோதிகா குறித்து ஏதாவது ஒரு விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இருந்தாலும், அவர் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தைரியமாக பதிலடி கொடுத்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ரசிகர், சூர்யாவை விட விஜய் தான் நல்ல நடிகர் என்று கமெண்ட் செய்திருக்கிறார். அதற்கு ஜோதிகா, சிரிக்கும் இமோஜி வைத்திருக்கிறார். ஜோதிகாவின் இந்த பதிவுதான் ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது.