நான் 5 வயதிற்கும்போதே நாடகம் ஒன்றில் - 'மதகஜராஜா' படத்தில் சந்தானத்தின் மாமியாராக நடித்த நடிகை ஜெயலட்சுமி

By krithika · 7/2/2025

நடிகை கே.எஸ் ஜெயலட்சுமி அவர்களின் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமா, சீரியல்களில் குணச்சித்திர கதாபாத்திரங்கள் மற்றும் வில்லி ரோல்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை கே.எஸ்.ஜெயலட்சுமி. இவர் முதன் முதலில் கன்னட சினிமாவில் தான் ஹீரோயின் ஆக நடித்து இருந்தார். அதற்குப் பிறகு கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான ' எதற்கும் துணிந்தவன்' படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு இவர் நடித்திருந்த 'மதகஜராஜா' திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் வெளியாகாமல், கடந்த பொங்கலை முன்னிட்டு தான் வெளியாகியிருந்தது. இந்தப் படத்தில் நடிகர் சந்தானத்தின் மாமியார் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். மதகஜராஜா திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இவர், சின்னத்திரை சீரியல்களிலும் அதிகம் நடித்துள்ளார்.

கே எஸ் ஜெயலட்சுமி பேட்டி:

அந்த வகையில் தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'பேரன்பு' மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'வீட்டுக்கு வீடு வாசப்படி' போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்திருக்கும் ஜெயலட்சுமி, சினிமாவில் அவர் கடந்து வந்த பல விஷயத்தைப் பற்றி பகிர்ந்திருக்கிறார். அதில், நான் ஐந்து வயதாக இருக்கும்போதே நாடகம் ஒன்றில், 'சங்கே முழங்கு' பாடலுக்காக ஆடியிருக்கிறேன். அங்கு இருந்து தான் எனது நாடகப் பயணம் தொடங்கியது. அதேபோல் கே. பாலச்சந்தர் சாரும் நாடகத்துறையில் இருந்து வந்ததால், நாடகத்துறையில் இருந்து வந்த என் மீது அவருக்கு ஒரு தனி அக்கறை உண்டு.

https://www.youtube.com/watch?v=y8Qog6G64dA

புன்னகை மன்னன்:

பாலச்சந்திர் சாரின் அக்னிசாட்சி, பொய் கால் குதிரை, மனதில் உறுதி வேண்டும், காதலே நிம்மதி, உன்னால் முடியும் தம்பி, புதுப்புது அர்த்தங்கள், கல்கி என பல திரைப்படங்களில் நான் நடித்திருக்கிறேன். மேலும், நான் புன்னகை மன்னன் திரைப்படத்தில் ரேவதிக்கு அம்மாவாக நடித்திருந்தேன். அதுதான் நான் முதல் முதலாக அம்மா கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம். அப்போது டப்பிங் பேச சென்றபோது, நீங்க ரேவதிக்கு அம்மாவா? இவ்ளோ சின்ன வயசுல அம்மாவாக நடிக்கிறியே? பார்ப்பதற்கு ரேவதியும் நீயும் ஒரே மாதிரி தான் இருப்பீங்க என்று கேட்டார்கள். அப்போது நான், பாலச்சந்தர் சார் சொன்னாரு அதற்காக நடிக்கிறேன்.

கே பாலச்சந்தர் குறித்து:

எந்த ரோல் யாருக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று அவருக்கு நன்றாக தெரியும் என்று அவர்களிடம் கூறினேன். அதைதொடர்ந்து பேசிய ஜெயலட்சுமி, நான் சினிமாவில் முதன் முதலில் கவர்ச்சி நடிகை ஆகத்தான் நடித்தேன். அதன் பிறகு எனக்கு வந்த அனைத்து கதாபாத்திரங்களும் கவர்ச்சி கதாபாத்திரங்களாகவே வந்தது. ஆனால், கே பாலச்சந்தர் சார் தான் என்னை அழைத்து எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுத்தார். அதுவரை கவர்ச்சி நடிகை ஆக இருந்த என்னை புடவை கட்டி அழகு பார்த்தவர் கே பாலச்சந்தர் சார் தான்.

எஸ் பி முத்துராமன் சொன்னது:

அதன் பிறகு அவரின் பல திரைப்படங்களில் நான் நடித்திருக்கிறேன். என்னிடம் எஸ் பி முத்துராமன் சார் கூட ஒரு முறை எங்களுக்கெல்லாம் கிளாமரா தெரிஞ்ச ஜெயலட்சுமி, பாலச்சந்திரனுக்கு மட்டும் புடவையில் பார்க்க வேண்டும் என்று எப்படி தோன்றியது என்று கேட்டார். அதற்கு நான் அது தான் சார் கே பி. நீங்க எப்பவுமே என்னை கிளாமரா பார்த்து பழகிட்டிங்க, அவர் வித்தியாசமாக யோசித்து இருக்காரு. எப்பயுமே இவங்க கிளாமரா தானே காட்றாங்க இவங்கள பேமிலில காட்டணும் என்று கேபி சார் எனக்கு அந்த வாய்ப்பு கொடுத்தார் என்று ஜெயலக்ஷ்மி பகிர்ந்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full