அக்டோபர் 30 ஆம் தேதி திருமணம் - காஜலை திருமணம் செய்து கொள்ளும் நபர் இவ்வளவு பெரிய ஆளா.
தனது திருமணம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார்.
https://www.instagram.com/p/CF94SKmBiT4/?igshid=aa7qekxru2sj
இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார். கடந்த வருடம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. மேலும், சமீப காலமாக சோசியல் மீடியாவில் காஜல் அகர்வால் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்றும், அவர் வேறு ஒரு நபருடன் நெருங்கிய உறவில் இருக்கிறார் என்றும், விடுமுறை நாட்களில் தன் நண்பர்களுடன் ஊர் பயணங்கள் செல்கிறார் என்றும் அவரைப் பற்றி பல வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன.
இப்படி ஒரு நிலையில் நடிகை காஜல் அகர்வால் தொழில் அதிபர் ஒருவரை விரைவில் திருமணம் செய்துகொள்ளபோவதாக தகவல்கள் வெளியானது.இதுகுறித்து தனது சமூக வளைத்தளத்தில் தெரிவித்துள்ள காஜல் அகர்வால், தனக்கு வரும் 30 ஆம் தேதி மும்பையில் கவுதம் கிச்லு என்பவருடன் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறியிருந்தார்.
https://www.instagram.com/p/CF_nyPCBtTb/
காஜல் அகர்வால் திருமணம் செய்துகொள்லும் அந்த நபர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. காஜல் திருமணம் செய்து கொள்ள இருக்கும் கவுதம் கிச்லு,ஒரு பிரபல தொழிலதிபராம். அவர் இன்டீரியர் டிசைனர் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறாராம்.