திருமணத்திற்கு பின்னரும் இப்படி ஒரு கிளாமரா - வைரலாகும் காஜலின் லேட்டஸ்ட் வீடியோ.

By Rajkumar · 31/7/2021

நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் ஹனி மூன் சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார்.

இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார்.கடந்த வருடம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் கால்ஸ் படத்தில் நடித்து இருந்தார்.

காஜல் அகர்வாலின் திருணம் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி மாலை நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் படு கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் காஜல். இதை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பின்னும் இப்படி ஒரு கிளாரமா என்று வியந்து உள்ளனர்.

தமிழில் தற்போது பல்வேரு திரைப்படங்களில் லீட் ரோலில் நடித்து வரும் காஜல், தற்போது கமலின் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். அதே போல இந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் பல படங்கள் வெளியாக இருக்கிறது. இப்படி பிசியாக நடித்து வரும் காஜல் தன் கணவர் நடிப்பதை நிறுத்த சொன்னால் நிச்சயம் நிறுத்திவிடுவேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full