திருமணத்திற்கு தயார். இந்த நடிகரை திருமணம் செய்துகொள்ள சம்மதம். காஜல் ஓப்பன் டால்க்.

By Rajkumar · 28/10/2019

தெலுங்கு சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், தற்போது ரசிகர்களால் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூட அழைப்பட்டுபவர் தான் நடிகர் பிரபாஸ். இவர் தெலுங்கில் 2004 ஆம் ஆண்டு வெளியான 'வருஷம்' என்ற திரைப்படத்தின் மூலம் மக்களிடையே அதிகமாக பரவலாக பேசப்பட்டார். அதற்குப் பிறகு மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர்ஃபெக்ட் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இந்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தெலுங்கில் நடித்து தமிழில் வெளியான பாகுபலி, பாகுபலி 2 படம் அவருடைய திரையுலக பயணத்திலேயே மிகப் பெரிய படம் என்றும்,பிரபாஸின் புகழ்ச்சிக்கு காரணம் என்று கூறலாம்.

இதனைத்தொடர்ந்து படத்தில் பாகுபலி பிரபாஸ் ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே படம் முடியும் வரை அனுஷ்காவுக்கும் பிரபாஸும் காதல் இருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகளையும்,வதந்திகளையும் எழுப்பி வந்துள்ளனர். மேலும்,சமீபத்தில் பிரபாஸ் அவர்கள் நடிப்பில் வெளிவந்த 'சாஹோ' படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.பின் பிரபாஸ் அவர்கள் சமீபத்தில் நடந்த பேட்டியில் கூறியது, எனக்கும் அனுஷ்காவுக்கும் இடையே இருப்பது நட்பு தான். மற்ற படி நீங்கள் நினைக்கிற மாதிரி எல்லாம் காதல் எதுவும் ஒன்றும் இல்லை. மேலும், எனக்கும் கல்யாணம் பண்ணிக்க ஆசை எல்லாம் இருக்கு. ஆனால் நான் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் பண்ணிக்கொள்ள முடியவில்லை.

தற்போது, என் திருமணம் குறித்து தீவிரமாக பேசி வருகிறார்கள். விரைவில் நான் திருமணம் செய்துகொள்வேன் என்று பகிரங்கமாக பேட்டியளித்துள்ளார் பிரபாஸ். இதனைத் தொடர்ந்து தென்னிந்திய சினிமா திரை உலகில் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த பேட்டியில் காஜல் தன்னுடைய கல்யாணம் குறித்து கூறியுள்ளார். அதில் காஜல் அகர்வால் கூறியது,எங்கள் வீட்டில் என் கல்யாணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நானும் என் கல்யாணத்துக்கு ரெடியாக இருக்கிறேன் என்ற தகவல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எந்த நடிகரைப் போல மாப்பிள்ளை வேண்டுமென நினைக்கிறீர்கள் என்று காஜலிடம் கேட்டிருந்தார்கள். அதற்கு உடனே காஜல் அவர்கள் பிரபாஸ் என்று பெயர் கூறினார்.

மேலும், இந்த நடிகர் போல இருந்தால் நான் திருமணம் செய்துகொள்ள தயாராக உள்ளேன் என்றும் கூறியிருந்தார். மேலும் நடிகர் பிரபாஸ் அளித்த பேட்டி தொடர்ந்து நடிகை காஜல் அகர்வாலும் கூறிய திருமணம் நியூஸ் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆக போய்க்கொண்டு உள்ளது. அதோடு காஜல் தன்னுடைய வருங்கால கணவர் நடிகர் பிரபாஸ் போல் இருக்க வேண்டும் என்று கூறிய பதில் ரசிகர்களிடையே பயங்கர ஆச்சிரியத்தையும்,ஆவலையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், இவர்கள் இருவரும் திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றன. பிரபாஸ், காஜல் அகர்வால் திருமணம் குறித்து ரசிகர்கள் சந்தோஷத்திலும்,உற்சாகத்திலும் உள்ளனர்.

behindtalkies AMP · Quick view
View full