7 வருடங்களுக்கு முன் ஆப்ரேஷன் தற்போது 6 மாதங்களாக அவஸ்தை, மீண்டும் ஆப்ரேஷன்- கல்யாணி வெளியிட்ட உருக்கமான வீடியோ.

By Rajkumar · 17/8/2023

தமிழ் சினிமாவில் எத்தனையோ மறக்க முடியாத குழந்தை நட்சத்திரங்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை கல்யாணியும் ஒருவர். இவருடைய உண்மையான பெயர் பூர்ணிதா. தமிழில் இவர் அள்ளித்தந்த வானம் படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். அதன் பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் கல்யாணி நடித்திருந்தார். மேலும், நடிகர் ஜெயம் ரவி அறிமுகமான “ஜெயம்” படத்தில் நடிகை சதாவிற்கு தங்கையாக கல்யாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை பூர்ணிதா.

அந்த கதாபாத்திரம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானதால் இவரது பூர்ணிதா என்ற பெயரை மறந்து கல்யாணி என்றே எல்லோரும் அழைக்கபட்டார்கள். மேலும், இவர் திரைப்படங்களில் நடித்ததோடு மட்டும் இல்லாமல் பீச் கேர்ள்ஸ், ஜூனியர் சீனியர், சூப்பர் மாம் போன்ற பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார். திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த போதே சீரியலில் கல்யாணி நடித்துக்கொண்டிருந்தார்.

உடல் ரீதியான பாதிப்புகள் :

பின்னர் இவர் சின்னத்திரையில் செட்டில் ஆகி விட்டார். கடந்த 2013 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் கல்யாணி சின்னத்திரையில் இருந்து விலகி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் ஜீ தமிழ் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார். அதற்கு பின்னர் இவர் எதிலும் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் இன்ஸ்டா பக்கத்தில் கல்யாணி அவர்கள் உருக்கமான பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் அவர், நான் கடந்த ஒன்றரை மாதங்களாக உடல் ரீதியாக ரொம்ப மோசமாக பாதிக்கப்பட்டிருந்தேன்.

https://www.youtube.com/watch?v=9j4rxCE5bJU

அறுவை சிகிச்சை

என்னுடைய உடல் ஆரோக்கியம் நாளுக்கு நாள் மிகவும் கடினமாக இருந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு என்னுடைய முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்திருந்தார்கள். அதற்கு பிறகு நான் நலமாக இருந்தேன். பின் எனக்கு ஒரு மகள் நவ்யா பிறந்தார். அதற்குப்பின் கடந்த ஆறு மாதமாக மீண்டும் எனக்கு பிரச்சினை ஆரம்பித்தது. இது தொடர்பாக நான் மருத்துவரை சந்தித்து பேசும்போது அவர் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தான் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், பிளேட் மற்றும் ஸ்க்ரூவை நீக்கி புதிய எலும்பை வைக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னார். அதற்கு பிறகு அறுவை சிகிச்சை செய்தோம். இப்போது நான் குணமாக இருக்கிறேன். இதனை அடுத்து எனக்கு பிரச்சனை வராது என்று நினைக்கிறேன். என் கையைப் பிடித்து ஆறுதல் அளித்தும், என்னை அதிகமாகவும் என்னுடைய ஐந்து வயது மகள் தான் பார்த்துக் கொண்டார். என் குடும்பத்திற்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

கல்யாணி வெளியிட்ட வீடியோ :

ஆனால், இந்த வீடியோவை போட்ட சில நிமிடங்களில் நீக்கிய கல்யாணி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் பேசிய அவர், தற்போது சோசியல் மீடியாவில் என்னைப் பற்றி மிகவும் மோசமாக விமர்சித்து பதிவிட்டு வருகிறார்கள். இறந்த உடலில் என்னுடைய முகத்தை மாப்பிங் செய்தெல்லாம் போட்டு இருக்கிறார்கள். நான் ஓய்வில் வீட்டில் இருந்தபோது என்ன மாதிரியான மன ரீதியில் இருக்கிறேன் என்று பதிவு போட்டிருந்தேன். அதை இவர்கள் தவறாக பேசி விமர்சித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full