உங்கள மாதிரி பாரபட்சம் கொண்ட ஆள நான் பார்த்ததில்லை - கங்கனா ரனாவத் ஆவேசம்

By subhashini · 18/1/2026

தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவு கொண்டிருந்த இவர் இசை மீது இருந்த ஈடுபட்டால் தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக்கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம். பின்பு, பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மான், முதல் முதலாக இசையமைத்தது மலையாளத்தில் தான்.

மோகன்லால் நடிப்பில் வெளியான ‘யோதா’ என்ற திரைப்படத்தில் தான். அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே தமிழில் ‘ரோஜா’ படம் வெளியானதால் இந்த படமே ரஹ்மானின் முதல் படமாக மாறியது. தான் இசையமைத்த முதல் படத்திலேயே அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டானதை தொடர்ந்து, கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களுக்கும் இசை அமைத்து இருக்கிறார்.

ஆஸ்கார் நாயகன்:

ஏ.ஆர். ரஹ்மானுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த கடந்த மில்லியனர்’ படத்திற்கு இசையமைப்பதற்காக இரண்டு ‘ஆஸ்கார் விருதுகள்’ கிடைத்தது நாம் அறிந்ததே. இப்படி 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வருகிறார். மேலும், சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏ ஆர் ரகுமான் பாலிவுட் படங்களை பற்றி பேசியது, பாலிவுட் படத்தில் அதிகாரம் என்பது படைப்பாற்றல் இல்லாத நபர்களின் கதைகளில் இருக்கிறது. அவர்கள் தான் முடிவு எடுக்கும் விதத்தில் இருக்கிறார்கள். பாலிவுட்டில் மதரீதியான பாகுபாடுகள் நிறைய இருப்பதாக கூறப்படுகிறது.

கங்கனா ரனாவத் பதிவு:

நான் வேலை தேடி அலைபவன் கிடையாது. என்னை தேடி வர வேண்டும். அதோடு கங்கனா நடித்த எமர்ஜென்சி படத்தில் chhavaa பிரிவினை ஏற்படுத்தும் படம் என்றும் கூடியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக கங்கனா ரனாவத், அன்புள்ள ரகுமான் ஜி. நான் ஒரு காவி கட்சியை ஆதரிப்பதால் திரை உலகில் நான் முன்முடிவோடு அணுகப்படுவதையும் நிறைய பாரபட்சத்தையும் எதிர் கொள்கிறேன். ஆனால், உங்களை விட பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட ஒருவரை நான் பார்த்ததே இல்லை என்று தான் சொல்லணும்.

ரகுமானை விமர்சிக்க காரணம்:

நான் இயக்கிய எமர்ஜென்சி கதையை உங்களுக்கு சொல்ல விரும்பினேன். ஆனால், கதை கேட்பதை விடுங்கள். நீங்கள் என்னை சந்திக்க கூட மறுத்துவிட்டீர்கள். பிரச்சார படத்தினுடைய ஒரு பகுதியாக இருக்க நீங்கள் விரும்பவில்லை என்று எனக்கு சொன்னார்கள். ஆனால், எமர்ஜென்சி ஒரு தலை சிறந்த படைப்பு என்று விமர்சகர்கள் பாராட்டினார்கள். இன்னும் சொல்லப்போனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட நான் படத்தை அணுகி இருந்த விதத்தை பாராட்டி எனக்கு கடிதம் எல்லாம் அனுப்பி இருந்தார்கள். ஆனால், உங்கள் கண்ணை மட்டும் வெறுப்பு மறைத்தது. உங்களுக்காக நான் வருந்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full