பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு சத்தம் இல்லாமல் நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்- மாப்பிள்ளை யார் தெரியுமா?

By subhashini · 4/7/2024

'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகைக்கு திருமணமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே மக்களின் பொழுதுபோக்கு நிகழ்வாக சின்னத்திரை தொடர்கள் அமைந்துள்ளது. அதிலும் கொரோனா லாக் டவுனில் இருந்து அனைவரும் சின்னத்திரை சீரியலை நோக்கி சென்று விட்டார்கள். குறிப்பாக, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருந்த தொடர்களில் ஒன்றாக 'பாரதி கண்ணம்மா' சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து முடியும் வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத், கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். பின் இவர் இடையில் சீரியலில் இருந்து ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார்.

பாரதி கண்ணம்மா சீரியல்:

இவர் சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியாகி இருந்த 'கருடன்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்தும் இவர் சில படங்களில் கமிட்டாகி நடிப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த சீரியலில் நடித்த சில நடிகர்கள் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவுக்கு வில்லியாகவும், தங்கையாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் 'கண்மணி மனோகரன்'.

கண்மணி நடித்த சீரியல்கள்:

இவர் ஆரம்பத்தில் சீரியலில் வில்லத்தனங்கள் செய்து பின் பாசிட்டிவாக இவருடைய கதாபாத்திரம் மாறி இருந்தது. மேலும், இந்த சீரியலின் மூலம் தான் கண்மணி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இருந்தும் இந்த சீரியலில் இருந்து இவர் பாதியிலேயே விலகிவிட்டார். அதற்குப் பிறகு இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இருந்த 'அமுதாவும் அன்னலட்சுமி' என்ற தொடரில் ஹீரோயினியாக நடித்திருந்தார்.

கண்மணி-அஸ்வத் காதல்:

இந்த சீரியலும் கடந்த ஆண்டு முடிந்தது. அதற்கு பின் இவர் பெரிதாக எந்த சீரியலிலும் கமிட்டாகவில்லை. அதோடு இவர் சினிமாவில் முயற்சித்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை கண்மணிக்கு திருமணம் ஆக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகை கண்மணி அவர்கள் சன் டிவி தொகுப்பாளர் 'அஸ்வத்' என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்.

கண்மணி-அஸ்வத் நிச்சயதார்த்தம்:

பின் இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். தற்போது இவர்களுடைய நிச்சயதார்த்தம் எளிமையாக நடைபெற்றிருக்கிறது. இந்த நிச்சயதார்த்தத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார்கள். தற்போது இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படம், வீடியோக்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. கூடிய விரைவில் இவர்களுடைய திருமண தேதி குறித்த தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full