நடிகை கனிகா தன் மகனை நினைத்து கண்கலங்கிய தருணம். திவ்யா வெங்கடசுப்பிரமணியம் மக்களால் கனிகா என்று திரைப்படம் முழுவதும் அறியப்படுபவர் .இவர் மதுரையில் 1982 ஆம் ஆண்டு பிறந்தார் இவர் கன்னடம், மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைத்துறையின் மீது ஆர்வத்தினால் கல்லூரி படிக்கும் பொழுது பாட்டு பாடுதல் நாடகம் இது போன்ற நடித்துள்ளார். இவர் சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியை பங்கு பெற்று வெற்றி பெற்றார் இதனால் திரைத்துறைக்கு வர காரணமாக இருந்தது.

திரைபயணம் மற்றும் இசையின் மீது கொண்ட ஆர்வத்தினால் இவரின் இனிய குரலுக்கு சரியான தமிழ் உச்சரிக்கும் திறமையினால் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியபோது பின்னணி குரல் கொடுத்து வந்தார். இவர் நடித்த திரைப்படமான 5ஸ்டார் படத்திலும் பாடம் பாடி உள்ளார். குறிப்பாக சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாக்கு இவர் பின்னணி குரல் கொடுத்தார். தனது முதல் திரைப்படம் ஆன 2002ஆம் ஆண்டு வெளியான 5 ஸ்டார் என்ற படத்தின் மூலம் இவர் அறிமுகமானார்.

Advertisement

நடிகை பிளஸ் பாடகி :

அதை முதலில் 20 படங்களுக்கு மேல் தமிழ் மற்றும் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். பின்னணி பாடகியாக இரண்டு படங்களுக்கு மேல் பாடியுள்ளார். இவர் விளம்பரங்களில் நடித்துள்ளார் சென்னை சில்க்ஸ் விளம்பரம், கல்யாண் சேலை, ரத்னா தங்க மாளிகை, டாட்டா கோல்டு, ஆச்சி மசாலா போன்ற பல விளம்பரங்களில் விளம்பரங்களில் நடித்துள்ளார். திரைப்படத்தின் கொண்ட ஆர்வத்தினால் சிறப்பான நடிப்பின் காரணமாக தமிழ் மட்டும் மலையாளத்தில் பல விருதுகள் பெற்றார்.

வாழ்க்கையின் சோகமான தருணம் குறித்து இவர் பகிர்ந்தது.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனிகா இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் என்ற நாடகத்தில் கஸ்தூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். குறிப்பாக வரலாறு படத்தில் இவர் அஜித்துக்கு ஜோடியாக நடித்த கதாபாத்திரம் மக்கள் அனைவரும் கொண்டாடப்பட்டது இவரின் வாழ்க்கையில் பல சோகங்கள் நடந்துள்ளது தற்போது ஒரு பேட்டியில் தன் சோகத்தை பகிர்ந்து உள்ளார்.

Advertisement

தன் மகனை நினைத்து கண்கள் கலங்கிய கன்னிகா.

அதில் ‘ கர்ப்பமாக இருந்த நேரத்தில் தனக்கு எல்லா பெண்களுக்கும் செய்வது போல் ஸ்கேன் செய்து பார்த்தார்கள். ஆனால், தன்னுடைய குழந்தையை பற்றி எதுவுமே தெரியவில்லை. குழந்தை பிறந்து உடனே என்னிடம் என் குழந்தையை காட்ட வில்லை. மருத்துவர் வந்து குழந்தையின் இருதயத்தில் பிரச்சனை இருக்கிறது என்று கூறினார்கள். இந்த இரவு வரை அவர் உயிரோடு இருக்க மாட்டார் என்று கூறினார். அப்போது என்னுடைய வாழ்க்கை வெறுத்தது போல் இருந்தது.

Advertisement

7 மணி நேர ஆப்ரேஷன் :

மேலும், என்னால் எழுந்து நடக்க முடியாத சூழ்நிலையில் என் மகனை பார்க்க வேண்டும் என்று எழுந்து சென்றேன். பிறந்தவுடன் Icu வார்டில் வைத்திருந்தார்கள். அதை பார்த்த உடனே என் மனம் இரண்டாக உடைந்தது. அங்கே கதறி அழுது கீழே விழுந்து விட்டேன். அப்போது நான் வேண்டாத தெய்வம் இல்லை. நான் சாய்பாபாவின் மீது என்னுடைய பாரத்தை சுமத்தினேன். ஏழு மணி நேரம் ஆப்ரேஷன் செய்து என் மகனை பிழைக்க வைத்து விட்டார்கள். இப்போதில் இருந்து என் மகனை கண்ணும் கருத்தாக பார்த்து வருகிறேன். அத்தருணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்’ என்று இவர் மனம் நெகிழ்ந்து கூறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement