40 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் செய்யாமல் இருக்க காரணம் என்ன ? கிரிக்கெட் வீரருடனான காதல் பிரேக் அப் காரணமா ? கௌசல்யா பதில்

By subhashini · 6/9/2023

திருமணம் செய்து கொள்ளலாம் இருக்க காரணம் இதுதான் என்று கௌசல்யா அளித்து இருக்கும் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் நடிகைகளை விட 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் இருந்த நடிகைகளுக்கு தான் ரசிகர்கள் அதிகமாக இருந்தார்கள் என்பது தவிர்க்க முடியாத உண்மை. அதிலும் 90 காலகட்டத்தில் வந்த அனைத்தும் நடிகைகளும் அழகும் திறமையும் கொண்ட நடிகைகளாகவே இருந்தனர்.

அந்த வகையில் நடிகை கௌசல்யாவும் ஒருவர். தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நாயகியாக நடித்தவர் கெளசல்யா. இவர் விஜய், பிரபு தேவா, கார்த்தி, மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடியாக நடித்தவர். தமிழில் இவர் முரளி நடிப்பில் வெளியான ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் இவருக்கு அடுத்த படத்திலேயே நேருக்கு நேர் படம் மூலம் விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பும் கிடைத்தது.

கௌசல்யா திரைப்பயணம்:

மேலும், விஜய்யுடன் பிரியமுடன் படத்திலும் நாயகியாக கௌசல்யா நடித்தார். பின்னர் அதே விஜய்யுடன் திருமலை படத்தில் ரகுவரன் மனைவியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்தாலும் கவர்ச்சியான வேடத்தில் நடித்தது கிடையாது. இடையில் சில ஆண்டுகள் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார் கௌசல்யா. சமீப காலமாக மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

கௌசல்யா திருமணம் சர்ச்சை:

இவருக்கு தற்போது 41 வயது ஆனாலும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக தான் இருந்து வருகிறார். ஆனால், இவருக்கு திருமணம் நடைபெற்றதாக வதந்திகள் எல்லாம் வந்தது. மேலும், இவர் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் கௌசல்யா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய திருமணம் குறித்து சொன்னது, நான் திருமணம் செய்து என்னுடைய வாழ்க்கையை தொடங்கும் அளவிற்கு ஒரு சரியான நபரை பார்க்க வில்லை.

கௌசல்யா அளித்த பேட்டி:

பின்பு எப்படி நான் திருமணம் செய்ய முடியும். ஒரு வேலை நான் எதிர்பார்க்கும் ஒரு நபரை சந்தித்து இருந்தால் கண்டிப்பாக திருமணம் குறித்து யோசித்து இருப்பேன். சினிமாவில் இருந்து விலகி இருந்தபோது நான் கிரிக்கெட் வீரரை காதலித்தேன். பின் பிரேக் அப் செய்ததாக செய்திகள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளிவந்திருந்தது. ஆனால், அதெல்லாம் உண்மை இல்லை.

https://www.youtube.com/watch?v=KqHzt021OAA

திருமணம் குறித்து சொன்னது:

நான் திருமணம் செய்யாததற்கு காரணம் அதிகம் காரணம் என் பெற்றோர்கள் தான். நான் பெற்றோருடன் இருந்து வளர்ந்து விட்டேன். நான் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது. அதுபோல அவர்களைப் பிரிந்து என்னாலும் இருக்க முடியாது. இந்த காரணத்தினால் தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full