தேசிய விருதுக்கு பின் குவிந்த பட வாய்ப்பு, கொட்டிய பணம் - புதிய தொழிலை அறிவித்த கீர்த்தி சுரேஷ்.

By ·

பொதுவாக நடிகர்கள் சிலர் தங்கள் பணத்தை மீண்டும் சினிமாலவிலேயே முதலீடு செய்யார்கள். நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி போன்றவர்கள் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை இயக்கி வருகிறார்கள். ஆனால், நடிகைகள் இந்த ரிஸ்க்கை எடுப்பது இல்லை. அதற்கு மாறாக, பெரும்பாலும் நடிகைகள் தங்களுடைய சம்பாத்தியத்தை முழுவதும் சொத்துக்கள் ஆகவும், ரியல் எஸ்டேட் மீதும் முதலீடு செய்வார்கள். அதோடு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வாடகைக்கு வாங்கி விடுகிறார்கள். நகை கடை, திருமண மண்டபம் என்று பல வகைகளில் தங்களுடைய முதலீடுகளை போட்டு தொழில் நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் முதலில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் சமந்தா சொந்தமாக ' ‘சகி’ என்று பெயரில் ஆன் லைனில் ஜவுளி வியாபாரம் செய்கிறார். இதில் பெண்களுக்கான உடைகள் விற்கப்படுகின்றன. விழா நிகழ்ச்சிகளுக்கு பலூன்கள் மற்றும் தோரணங்கள் கட்டி அலங்கரிக்கும் கடையை மும்பையில் நடத்தி வருகிறார் ஹன்சிகா.

அதே போல காஜல் அகர்வால் மும்பையில் செயற்கை நகைகள் செய்யும் கம்பெனி வைத்து இருக்கிறார். சமீபத்தில் நயன்தாரா கூட பிரபல தேநீர் நிறுவனத்தில் பல கோடி முதலீடுகளை செய்து உள்ளார். இப்படி ஒரு நிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் கீர்த்தி சுரேஷும் தற்போது தொழிலதிபராகி இருக்கிறார்.

https://twitter.com/KeerthyOfficial/status/1428639601426526208

Bhoomitra என்ற இயற்கை அழகு சாதன பொருட்கள் விற்கும் நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப்பை துவங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தின் வெப் சைட்டில் குங்குமபூ முதல் முகத்திற்கு தேவையான அழகு சாதன பொருட்களும் விற்கப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் தேசிய விருதை வென்ற பின்னர் இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்தது. அதன் மூலம் சம்பாதித்த பணத்தை இப்படி தொழிலில் போட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full